மேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
மேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்

துபாய்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் ஒருவர், துபாயில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


இந்திய தம்பதியினரின் மகனாக பிறந்த மஞ்சுநாத் நாயுடு(36) என்பவர், துபாயில், நகைச்சுவை கலைஞராக உள்ளார். இவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம்(ஜூலை 19) துபாயில் நடந்த நகைச்சுவை கலைஞர்களுக்கான நிகழ்ச்சியில் மஞ்சுநாத்தும் கலந்து கொண்டார். கடைசியில் மேடை ஏறிய அவர், மறைந்த அவரது பெற்றோரின் கதைகளை கூறி அனைவரையும் சிரித்தார். மன அழுத்தம் பற்றி பேசிய அவர், திடீரென மேடையில் மயங்கி சரிந்தார். இதனை பார்த்த பார்வையாளர்கள் இதுவும், நிகழ்ச்சியில் ஒரு பகுதி தான் என கருதினர். வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்காததால், அவரை எழுப்பிய போது, மஞ்சுநாத் உயிரிழந்தது தெரியவந்தது. இது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எதற்கெடுத்தாலும் பதட்டப்படும் மனிதர்கள் குறித்து மேடையில் நடித்துக் காட்டிய காமெடி நடிகர் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். துபாயில் நடந்தது இந்த நிகழ்ச்சி. நடிகரின் பெயர் மஞ்சுநாத் நாயுடு. இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்த நாயுடு நிகழ்ச்சிகளில் காமெடி நடிப்பு மற்றும் சமூக ஜோக்ஸ் மூலம் துபாய் மக்களிடம் பிரபலமாகி இருந்தார். மாங்கா என்பது அவரது செல்லப் பெயர். அல் பார்ஷா ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், இன்றைய மனிதர்கள் தவிப்புடன் ஓடிக் கொண்டே இருப்பதை நகைச்சுவையோடு விவரித்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்தார். அது நடிப்பு என நினைத்து பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். சில நிமிடங்களில் உடல் அசைவுகள் நின்றபிறகுதான் உண்மை அவர்களுக்கு உறைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜூலை-201912:47:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni பாவமாயிருக்கு சிரிக்க வச்சுண்டுட்டு இறந்துட்டார் மனது வலிக்குது அவரை போட்டோவைப் பார்த்தால் முதுமையாவும் தெரியலியே என்னகொடுமை ஐயா இது RIP
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
21-ஜூலை-201914:58:54 IST Report Abuse
oce நடிக்கும் போது உணர்ச்சி வசப்படாமல் நடிக்க வேண்டும். இதில் பெரும்புகழ் பெற்றவர் கலைவாணர்.அதிக உணர்ச்சி வசப்படும்போது இருதயம் செயலிழக்கும். ஒரு தடவை நின்றதை மீளவும் உயர்ப்பிப்பது இயலாது. இது ஆண்டவன் கட்டளை.
Rate this:
Share this comment
21-ஜூலை-201919:18:14 IST Report Abuse
மாயவரம் சேகர் என்எஸ்கிருஷ்ணன் பத்ரிகையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றார்.. சொந்த வாழ்விலும் உணர்ச்சி படுதல் கூடாது.. வில்லன் நடிகர் எம்என் நம்பியாரை உதாரணமாக கொள்ள வேண்டும்..ஹிந்தி நடிகர் பிரானும் கூட....
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
23-ஜூலை-201903:09:49 IST Report Abuse
BoochiMarunthuஉணர்ச்சி வசப்படுவதில் நடிகர் மோடியை மிஞ்ச ஆள் இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X