பொது செய்தி

இந்தியா

கடற்படைக்காக புதிய செயற்கைகோள் ஜிசாட் 7 ஆர்

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019
Share
Advertisement

புதுடில்லி : இந்தியக் கடற்படையின் தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-7 ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.



latest tamil news





ஜிசாட் - 7 ஆர் :


கடந்த, 2013ஆம் ஆண்டு இஸ்ரோ தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஜிசாட் 7 என்ற செயற்கைக்கோள் மூலம், இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றம் எளிதானது. தற்போது கடற்படையின் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேலும் நவீனப்படுத்தும் வகையில், ஜிசாட் 7ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.


latest tamil news





ரூ.589 கோடி ஒப்பந்தம்


இதற்காக, இஸ்ரோவுடன், ஆயிரத்து 589 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை கையெழுத்திட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news





கரையில் தொடர்பு :


கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் கடற்படை கப்பல்கள், நீர் மூழ்கிகள், போர் விமானங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பில் வைத்திருக்கவும், அவை, கரையில் உள்ள செயல்பாட்டு மையங்களுடன் தொடர்பில் இருக்கவும் ஜிசாட் 7ஆர் உதவும்.

2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தகவல் பரிமாற்றத்திற்காக இன்மார்சாட் என்ற பிரிட்டன் நிறுவனத்தையே, இந்தியக் கடற்படை சார்ந்து இருந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X