பொது செய்தி

தமிழ்நாடு

வடதமிழகத்தில் மழை வாய்ப்பு

Added : ஜூலை 21, 2019
Advertisement
வடதமிழகத்தில் மழை, சென்னை வானிலை மையம், சின்னக்கல்லார்

சென்னை : வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அம்மையத்தின் அறிக்கையில், ''சென்னையில் இன்றும்(ஜூலை 21) நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில், மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, நெல்லை மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், வால்பாறை, சோலையாற்றில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X