உள்ளாட்சியில் ஓட்டு சீட்டு ; மம்தா கோரிக்கை| Dinamalar

உள்ளாட்சியில் ஓட்டு சீட்டு ; மம்தா கோரிக்கை

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (8)

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், மின்னணு ஓட்டு இயந்திரங்களுக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு முறைதான் வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.








பா.ஜ.,வின் 18 சீட் வெற்றி :


இதுகுறித்து கோல்கட்டாவில் நடந்த திரிணமுல் பேரணியில் மம்தா பேசுகையில், '' கடந்த தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் துணையுடனே அவர்கள் (பா.ஜ.,) மத்தியில் ஆட்சியை கைப்பற்றினார்கள். மேற்கு வங்கத்திலும் மின்னணு ஓட்டு மிஷின்கள், தேர்தல் கமிஷன், சிஆர்பிஎப் மற்றும் மத்திய துணைராணுவப் படையினர் உதவியுடன் 18 எம்.பி., சீட்டுகளை மட்டுமே வென்றார்கள்.






ஆனால், அதற்கே மாநிலம் முழுவதும் எங்களது திரிணமுல் தொண்டர்களை தாக்குகிறார்கள்,'' என்றும் அவர் சாடினார்.







தோல்வி பயம் :


மம்தாவின் இந்த கருத்து குறித்து மேற்கு வங்கத்தின் பா.ஜ., தலைவர்கள் கூறுகையில், '' மம்தாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதையே அவரது சமீபத்திய குற்றச்சாட்டுகள் காட்டுகின்றன,'' என்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X