ஆதிவாசிகளுக்கு பாதுகாப்பு, நிவாரணம் ; யோகி

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (11)
Advertisement

லக்னோ : உத்தரபிரதேசத்தில், நிலப்பிரச்சினை தொடர்பாக நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆதிவாசி குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.







சோனாபத்ரா துப்பாக்கி சூடு :


உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் உள்ள உபா கிராமத்தில் விவசாய நிலத்தை அங்குள்ள பழங்குயிடின மக்கள் தர மறுத்ததால், ஊர் தலைவர் யக்யா தத் மற்றும் அவரது கூட்டாளிகள் கும்பலாக சென்று, கடந்த புதன்கிழமையன்று கண்மூடித்தனமாக அம்மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.






10 பேர் பலி ; 24 பேர் காயம் :


இதில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆளும் பா.ஜ., அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க சென்ற பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டார். அதை எதிர்த்து அவர் தர்ணா போராட்டமும் நடத்தினார்.







காவல் கட்டுப்பாட்டு அறை :


இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய யோகி ஆதித்யநாத், '' நிலத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அனைத்துவித உதவிகளை செய்யும். சம்பவம் நடந்த பகுதியில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தற்காலிகமாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்,'' என்று உறுதி அளித்தார்.


நிவாரணம் :


சிறிது நேரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 18.5 லட்சம் ரூபாய் நிவாரம் அறிவித்துள்ளார். அதேபோல காயமடைந்தோருக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, தலித் மற்றும் பழங்குடியின விதிகளின்படி அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
22-ஜூலை-201907:38:12 IST Report Abuse
Varatharaajan Rangaswamy பிணங்களை வைத்து அரசியல் செய்யும் காங்கிரசின் முயற்சியை தடுத்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் திராணி உள்ள அரசாக பாரதீய ஜனதா அரசு செயல்படுவதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
22-ஜூலை-201907:21:35 IST Report Abuse
ஆப்பு இவிங்க குடுக்குற லட்சங்களை எடுத்துக்கிட்டு போய் கடையில போன உசுருங்களை விலைக்கு வாங்க முடியுமான்னு பாருங்க... முடிஞ்சா எவ்வளவு பணம் வெணும்னச்லும் தர்ரேன்னு சொல்லி அந்த யாஹ்யா தத்தின் உயிரைக் கேளுங்க... யோகியிடம் கேளுங்க...
Rate this:
Share this comment
Cancel
22-ஜூலை-201907:18:03 IST Report Abuse
ஆப்பு இதுக்கெல்லாம் பெரிய ஐயா பொறுப்பேற்க மாட்டாரு... அந்தப் பக்கம் தலை வெச்சுக் கூட படுக்க மாட்டாரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X