பொது செய்தி

இந்தியா

ஷீலா தீட்ஷித் உடல் தகனம்

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (9)
Advertisement
ஷீலா தீட்சித், டில்லி, உடல்தகனம்

புதுடில்லி: மாரடைப்பால் காலமான டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் உடல், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

டில்லி முன்னாள் முதல்வரான ஷீலா தீட்ஷித் மாரடைப்பு காரணமாக நேற்று(ஜூலை20) காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், ராகுல், சோனியா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பிரதமர் மோடி, நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டில்லி அரசு இரண்டுநாள் விடுமுறை விட்டுள்ளது.


இன்று, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் வெளியறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Advertisementபின்னர், தீட்ஷித் உடல், அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


தொடர்ந்து அவரது உடல் , அலங்கரிக்கப்பட்ட, டில்லி அரசுக்கு சொந்தமான வாகனத்தில், யமுனை நதி ஆற்றங்கரையோரத்தில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.இந்த இறுதி ஊர்வலத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.


இதனை தொடர்ந்து, ஷீலா தீட்ஷித் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா, காங்., பொது செயலர் பிரியங்கா மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-ஜூலை-201913:37:59 IST Report Abuse
இந்தியன் kumar நல்லவர்கள் என்றும் மக்களால் புகழப்படுவார்கள் .
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
22-ஜூலை-201908:17:13 IST Report Abuse
kalyanasundaram what happened to about 32 air conditioners from her house as well illegal assets.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
21-ஜூலை-201920:08:26 IST Report Abuse
konanki பரவாயில்ல. பிரதமர் நரசிம்ம ராவ் உடல் காங்கிரஸ் அலுவலகத்தில் பார்வைக்கு வைக்க அனுமதி நேரு குடும்பம் தரவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X