ஒரு கட்சிக்கு 90 சதவீத தேர்தல் நிதி : மன்மோகன்

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (54)
Share
Advertisement

புதுடில்லி : நாட்டில் ஒரு கட்சிக்கு மட்டும் (பா.ஜ.,) 90 சதவீத தேர்தல் நிதி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார்.



latest tamil news


புதுடில்லியில், முன்னாள் மத்திய அமைச்சர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இந்திரஜித் குப்தாவின் பிறந்த நுாற்றாண்டு விழாவில் மன்மோகன் பங்கேற்று பேசினார்.


latest tamil news


அப்போது அவர், '' சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்த இந்திரஜித் குப்தாவின் நினைவுகளை அசைபோடுகிறேன். அதிலும் குறிப்பாக அவர் தேர்தல் செலவினங்களுக்கு அரசே நிதி வழங்கவேண்டியதன் அவசியத்தை அடிக்கடி வலியுறுத்துவார்.


latest tamil news



இப்போது தேர்தல் பத்திரங்கள் என்கிற பெயரால் ஒரு கட்சி மட்டுமே 90 சதவீத தேர்தல் நிதியை பெறும் நிலையில், இந்திரஜித் குப்தாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கவும், விரிவாக விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது,'' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங் பா.ஜ.,வைத்தான் மறைமுக குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஜூலை-201908:51:12 IST Report Abuse
ஆரூர் ரங் தேர்தல் பத்திரங்களை வாங்கி அளித்தவர்கள் விவரங்களை வெளியிடுதல் தகாது. மாற்றுக்கட்சிக்கு நன்கொடை அளித்த வர்த்தகர்கள் தொழிலதிபர்கள் பழிவாங்கலுக்குள்ளாவது சகஜமாக இருக்கும்போது அதனை வெளியிடுதல் அவர்கள் நேர்மையாக கொடுக்கும் நிதிக்கும் வேட்டு வைக்கும். மிரட்டி கறுப்பில் நன்கொடைவாங்கும்போக்கு மீண்டும் தொடரும் . அப்படி ஏதேனும் முறைகேடு என சந்தேகப்பட்டால் அமலாக்கத்துறையும் சி பி ஐயும் ஸ்டேட் வங்கியிடமிருந்து பத்திரம் வாங்கியவர் விவரங்களை பெறமுடியுமே
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-ஜூலை-201908:36:50 IST Report Abuse
RajanRajan ஓகோ, மன் ஜி தலைவர் கூட்டாட்சி தத்துவ படி எத்தெடுத்தாலும் சம பங்கீட்டு கொள்கை எங்கே என முழங்கி பார்க்கிறாரோ. மொத்தமா நாட்டிய ஊழலில் ஏலம் போடுறப்ப இவரு என்னமா மௌனம் அமைதி காத்தாரு இன்னிக்கு என்னமோ இப்படி பொங்கி எழுறாரு. தூக்கம் வரல்லியோ என்னவோ.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
22-ஜூலை-201905:55:49 IST Report Abuse
 N.Purushothaman தேர்தல் பத்திரம் மூலம் நேர்மையாக வருகிற பணத்தை பற்றி மண்ணுக்கு ஏன் கவலை ? அது சரி ....நேர்மைக்கும் இவிங்களுக்கும் காத தூரம் ஆச்சே ... இப்படியே புலம்ப வேண்டியது தான் .....
Rate this:
Pandiyan - Chennai,இந்தியா
22-ஜூலை-201907:30:15 IST Report Abuse
Pandiyanநேர்மையை நாம் கர்நாடகாவில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் நண்பரே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X