கர்நாடகா : சுப்ரீம்கோர்ட்டை நாடிய சுயேட்சைகள்

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (13)
Advertisement

பெங்களூரு : நாளை(ஜூலை 22) மாலை 5 மணிக்குள் கர்நாடக அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் இருவர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களும் வாபஸ் பெற்றுள்ளனர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா மீது சபாநாயகர் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. இந்தநிலையில், கடந்த வெள்ளியன்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் குமாரசாமி. ஆனால், ஓட்டெடுப்பு நடத்தாமல், நாளை காலை 11 மணி வரையில் அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார். இதனை கண்டித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று(ஜூலை 21) மாலை சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களான நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மறுப்பதாகவும், எனவே அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது நாளை மாலை 5 மணிக்குள் அவையில் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இது கர்நாடக மாநில அரசியலில் மேலும் ஒரு உச்சபட்ச பரபரப்பை கூட்டியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201903:24:53 IST Report Abuse
 Muruga Vel சுப்ரிம் கோர்ட் தீர்ப்பளித்தாலும் சபாநாயகர் கையில் வந்து சேர ஒரு வாரம் ஆகும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-ஜூலை-201900:21:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தாஜ் ஓட்டல் பில்லை கட்டுறேன்னு ஒத்துக்கிட்டவன் பாடு படு திண்டாட்டம் ஆயிருக்கும். பாவம்.. அவன் எவன் குடியைக் கெடுத்து அந்த காசை எடுப்பானோ? எல்லாப் புகழும் ஏழரை தாயின் மகனுக்கே
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
21-ஜூலை-201922:23:14 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Whatever it is the government moved the confidence motion should have proved it's majority.Their as well as the speaker's role is untenable.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X