மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
அரிச்சல் முனை, இலங்கை கடற்படையினர், தாக்குதல், ஆவணங்கள்

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, மீன்கள், ஆவணங்கள், கருவிகளை எடுத்துச் சென்றதாக ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.

கடந்த சனியன்று தனுஷ்கோடியிலிருந்து 60க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அரிச்சல் முனை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதோடு, படகில் இருந்த மீன்கள், கைகளில் அணிந்திருந்த கைக்கடிகாரங்கள், ஜிபிஎஸ் கருவிகள், படகின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றுவிட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஒரு மாத காலமாகவே இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற அத்துமீறல் தொடர்வதாகக் கூறும் மீனவர்கள், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-ஜூலை-201921:43:07 IST Report Abuse
A.George Alphonse சுமார் இரண்டரை வருடங்களாக இது போன்ற நிகழ்வுகள் நடக்கவில்லை.இப்போது மீண்டும் ஆரம்பம்.இந்த மீனவர்கள் மிகுந்த மீன் பிடிக்கும் ஆவலில் திசை மாறி போகும் நிலையால் தான் இது போன்ற அசம்பாவிதம் நடக்கிறது.மீனவர்கள் ஒழுங்காக நமது கடல் எல்லயில் மீன்பிடித்தால் எல்லோருக்கும் நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X