ரூ.128 கோடி மின் கட்டணம் உ.பி., விவசாயி அதிர்ச்சி

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (6+ 31)
Advertisement
ரூ.128 கோடி, மின் கட்டணம் ,உ.பி., விவசாயி, அதிர்ச்சி

லக்னோ:உத்தர பிரதேச மாநிலத்தில், விவசாயி ஒருவரது வீட்டுக்கு, அம்மாநில மின் வாரியம், 128 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தும்படி, 'பில்' அனுப்பிஉள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹாப்பூர் நகரில், சார்மி என்ற இடத்தில், ஷமீம் என்ற விவசாயி வசிக்கிறார். இவரது வீட்டுக்கு கடந்த மாதத்தின் மின்சார கட்டண, 'பில்' வந்தது. அதில், 128 கோடியே, 45 லட்சத்து, 85 ஆயிரத்து, 444 ரூபாய் மின்கட்டணம் செலுத்தும்படி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் ஷமீம், அதிர்ச்சிஅடைந்தார்.

தன் வீட்டில், ஒரு மின் விசிறி மற்றும், ஒரு, 'டூயூப் லைட்' மட்டுமே இருப்பதை, மின் வாரிய அதிகாரி களிடம் விளக்கினார். அதை பொருட்படுத்தாத மின் ஊழியர்கள், குறிப்பிட்ட தேதிக்குள் மின்கட்டணம் செலுத்தாததால், ஷமீம் வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர்.
இது குறித்து, ஷமீம் கூறியதாவது: இது, என் வீட்டுக்கான மின் கட்டணம் அல்ல. என் வீட்டில் இருக்கும் மின் சாதன பொருட்கள் குறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்தும், மின் இணைப்பை துண்டித்துவிட்டனர். மின் கட்டணத்தை செலுத்தினால் தான், மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படும் என்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

இதுபற்றி, ஹாப்பூர் நகர மின்வாரிய பொறியாளர் ராம் சரண் கூறுகையில், ''தொழில்நுட்ப கோளாறால் தவறு ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்படும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6+ 31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
22-ஜூலை-201920:02:12 IST Report Abuse
S.Ganesan பொறுப்பற்ற , லஞ்சம் வாங்கும் பேய்கள். பைத்தியக்காரர்கள் எல்லா இடத்திலும் அரசு வேலை என்று ஒரு பெரிய வெட்டி கூட்டமே இருந்து கொண்டு நாட்டை நாசமாக்குகிறது. பாதிக்கப்பட்டவரின் வீட்டை பார்த்தாலே அவர் எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்தவர் என்று தெரிகிறது. மேலும் இந்த அறிவு கேட்ட பன்னாடைகளுக்கு ஒரு வீட்டுக்கு தோராயமாக எவ்வளவு கட்டணம் வரும் என்றுதெரியாதா? ரீடிங் எடுத்தானுகளா இல்லையா ? ரீடிங் எடுத்தவனையும் , பில் போட்டவனையும் தண்டிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-ஜூலை-201918:55:58 IST Report Abuse
D.Ambujavalli மாநிலம் முழுவதுக்கும் ஆன தொகையோ என்னவோ ? பாவம் அந்தப் பெரியவர் பில் ஐப் பார்த்த அதிர்ச்சியில் உயிரை விட்டிருந்தால்....? முட்டாள்தனத்தை உச்சம் தொடர்பைத் துண்டித்தது நுகர்வோர் கோர்ட்டுக்குச் சென்று அந்த ப்ருஹஸ்பதிகளைத் தண்டித்து நஷ்ட ஈடு கொடுக்க வைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
easwaran.s - tiruvallur,இந்தியா
22-ஜூலை-201912:59:48 IST Report Abuse
easwaran.s அவருக்கு என்ன பில் அமௌன்ட் வந்ததோ அதை நட்ட ஈடாக தருமாறு தீர்ப்பு வரணும் அப்பதான் சூப்பரா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X