முழு அரசு மரியாதையுடன் ஷீலா தீட்ஷித் உடல் தகனம்

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
முழு அரசு மரியாதையுடன்  ஷீலா தீட்ஷித் உடல் தகனம்

புதுடில்லி:மாரடைப்பு காரணமாக இறந்த, காங்கிரஸ் மூத்த தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான, ஷீலா தீட்ஷித் உடல், டில்லியில் நேற்று, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, ஷீலா தீட்ஷித், 81, மூன்று முறை, டில்லி முதல்வராக இருந்து, சாதனை படைத்தவர். மத்திய அமைச்சராகவும், கேரள மாநில கவர்னராகவும் பதவி வகித்தவர்.
மாரடைப்பு

சமீபகாலமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஷீலா தீட்ஷித்துக்கு, நேற்று முன்தினம், மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல், டில்லி, நிஜாமுதீன் பகுதியில் உள்ள, அவரது வீட்டில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காங்கிரஸ் பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஊர்வலம்

பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரும், அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, நேற்று மதியம், ஷீலா தீட்ஷித் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு, டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. காங்., அலுவலகத்தில், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், சோனியா, மன்மோகன் சிங், அகமது படேல், கமல்நாத், அசோக் கெலாட் உள்ளிட்ட பலர், அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, டில்லி மாநில காங்., தலைமை அலுவலகத்திலும், அவரது உடல், சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது. பின், யமுனை நதிக்கரையில் உள்ள நிகம் போத் காட்டில், ஷீலா தீட்ஷித்தின் உடல், தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தொடர்பான விஷயங்களில், எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர், ஷீலா தீட்ஷித். என் மூத்த சகோதரி போல் இருந்து, பல ஆலோசனைகளை கூறினார். அவரது இறப்பு, எனக்கும், காங்கிரசுக்கும், மிகப் பெரிய இழப்பு.
--சோனியா, மூத்த தலைவர், காங்.,



Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-201914:39:52 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பிஜேபிக்கு பயந்துதான் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பூத உடலை வைத்தார்கள் , இல்லையென்றால் நரசிம்ம ராவிற்கு நடந்ததுபோல் நடந்திருக்கும். ஏற்கெனவே பிஜேபி இதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் காங்கிரெஸ்ஸை கழுவி ஊற்றி இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X