பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தயார்!
இன்று விண்ணில் பாய்கிறது, 'சந்திரயான் - 2';
ராக்கெட் பிரச்னை தீர்ந்ததாக இஸ்ரோ அறிவிப்பு

சென்னை:நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, 'சந்திரயான் - 2' விண்கலத்தை, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

 தயார்!,இன்று ,விண்ணில் பாய்கிறது,, 'சந்திரயான் - 2';,ராக்கெட் பிரச்னை ,தீர்ந்ததாக, இஸ்ரோ, அறிவிப்பு


இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.



கோளாறு




தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும் அங்கு மக்கள்

வாழ சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற் கொள்ள,'சந்திரயான் - 2' என்ற விண்கலத்தை, இஸ்ரோ, உருவாக்கியுள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, 'ஜி.எஸ். எல்.வி., மாக் 3 - எம்1' ராக்கெட், 15ம் தேதி, அதிகாலை, 2:51 மணிக்கு,விண்ணில் பாய இருந்தது.


அதற்கு, 56 நிமிடங்கள், 24 வினாடிகள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சந்திரயான் - 2 விண்கலம் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக, இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது. இதை அடுத்து, சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, 'ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 - எம் 1' ராக்கெட், இன்று மதியம், 2:43 மணிக்கு, விண்ணில் பாய்கிறது. இதற்கான, 'கவுன்ட் டவுன்' நேற்று மாலை, 6:43 மணிக்குதுவங்கியது.

நல்ல நிலை




இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சிவன், சென்னை, விமான நிலையத்தில், நேற்று, அளித்த பேட்டி:

Advertisement

சந்திரயான் - 2 விண்கலம், விண்ணில் ஏவுவதற்கான, அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன.கடந்த, 15ம் தேதி, ராக்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டன. அனைத்து பணிகளும் முடிவடைந்து, விண்கலம் நல்ல நிலையில் உள்ளது.


விண்ணில் ஏவப்பட்ட பின், சந்திரயான் - 2 விண்கலம், 48 நாட்களில், 15 கட்டங்களை கடந்து, நிலவின், தென் துருவத்தில் தரை இறங்கும். உலகின் எந்த நாடும், எடுக்காத முயற்சியை, நம் நாடு எடுத்துள்ளது.உலக அரங்கில், புதிய அறிவியல் கண்டுபிடிப்பாக, நிலவில் தண்ணீர் இருப்பதை, 'சந்திரயான் - -1' விண்கலம் கண்டுபிடித்தது.தற்போது, நிலவின் தென் துருவத்தில்,'சந்திரயான் - -2' விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதால், விஞ்ஞான ரீதியாக, அதிக தகவல்கள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-201914:44:29 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்நாசாவிற்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு சதவிகிதம் நிதி மட்டுமே இஸ்ரோவிற்கு கொடுக்கப்படுகிறது , அதைவைத்தே பல சாதனைகளை நம் விஞ்ஞானிகள் செய்து கட்டு இருக்கிறார்கள்.

Rate this:
22-ஜூலை-201914:43:04 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்வாழ்த்துக்கள், இந்தியாவில் உள்ள சிலருக்கு இதன் அருமை தெரியவில்லை என்றாலும் வெளிநாட்டினர் கூட நம் இஸ்ரோ விஞ்ஞானிகளை புகழ்ந்து வருகிறார்கள் , குறிப்பாக மங்கள்யான் , மிக குறைந்த செலவில் இந்த மிஷனில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சந்திரயான் -2 கூட மேலும் பல விஷயங்களுக்கு முன்னோட்டமாக இருக்க போகிறது.

Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201907:44:43 IST Report Abuse

Allah Danielஎதுக்கும், கருணாநிதி சமாதியின் முன், முரசொலி பேப்பரை வச்சமாதிரி, ராக்கெட் முன்னாலேயும் வச்சுருங்க..அப்பத்தான் பகுத்தறிவுல ராக்கெட் பீச்சுக்குட்டு போகும்..இல்லனா சொம்புகள் ரொம்ப கவலை படுவார்கள்..

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X