பதிவு செய்த நாள் :
கர்நாடகா, சட்டசபை,இன்று, நம்பிக்கை, ஓட்டு,நடக்குமா?

பெங்களூரு:கர்நாடகா அரசியலில், அடுத்தடுத்து அதிரடி அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. குமாரசாமிக்கு பதிலாக, காங்கிரசை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கி, ஆட்சியை தொடருவது குறித்து, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதசார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆளும் கூட்டணியை சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விவாதம்இதையடுத்து, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை, சட்டசபையில், முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார். அதன் மீது, இரண்டு நாட்கள் மட்டுமே விவாதம் நடந்தது. கடந்த, 19ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் வஜுபாய் வாலா இரண்டு முறை உத்தரவிட்டும், அதை மதிக்காமல், நம்பிக்கை ஓட்டெடுப்பை, முதல்வர் குமாரசாமி புறக்கணித்தார். இரண்டு நாட்கள் நடந்த கூட்டத் தொடர் நிகழ்வுகள் பற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, கவர்னர் வஜுபாய் வாலா, ஏற்கனவே அறிக்கை அனுப்பியுள்ளார்.


நம்பிக்கை
இதையடுத்து, இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் என, கூறப்பட்டது.

பா.ஜ., தலைவர்களும், 'கண்டிப்பாக இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும்; குமாரசாமி ஆட்சி கவிழும்'என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு அளித்துள்ள கொறடா உத்தரவு தொடர்பாக, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மாநில
ம.ஜ.த., தலைவர், எச்.கே.குமாரசாமி ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரலாம் என, தெரிகிறது.


அத்துடன், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பது தாமதமாவதால், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களான, முல்பாகல் நாகேஷ், ராணி பென்னுார் சங்கர் ஆகிய இருவரும் அதிருப்திஅடைந்துள்ளனர்.'சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்துகின்றனர். இன்று மாலை, 5:00 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, முதல்வர் குமாரசாமிக்கு உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், இரு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் புதிய வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.


இதேபோன்று, ராஜினாமா எம்.எல்.ஏ.,க்கள் சார்பிலும், புதிய மனு தாக்கல் செய்யப்படும் என, தெரிகிறது. இந்த வழக்குகள் எல்லாம், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும்வாய்ப்புள்ளது.

அவற்றில் என்ன தீர்ப்பு வெளியாகும் என்பதை எதிர்பார்த்து, மூன்று கட்சிகளும் காத்து இருக்கின்றன.

குழப்பம்உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான விவாதத்தை மேலும் சில நாட்கள் நீட்டிப்பதா அல்லது இன்றே முடிப்பதா என்பதை, ஆளும் கூட்டணி தரப்பு முடிவு செய்யும். இதனால், இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா, நடக்காதா என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இன்று சட்டசபையில், எப்படி நடந்து கொள்ள வேண்டுமென, நேற்று மாலையே, தங்களின் எம்.எல்.ஏ.,க்களுக்கு, ம.ஜ.த., - காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.இதற்கிடையே, சட்டசபைக்கு வராத, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், கூட்டணி அரசை தக்கவைக்க, முதல்வர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க, ம.ஜ.த., சம்மதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதன்படி, காங்கிரஸ் தலைவர்களிடம்,'உங்கள் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க் களை சமாதானப் படுத்துங்கள். முதல்வர் பதவியை விட்டு கொடுக்க தயார். நாங்கள் வெளியிலிருந்து ஆதரவளிக்கிறோம்' என, குமாரசாமி தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, நேற்று காலையில், துணை முதல்வர் பரமேஸ்வர், அமைச்சர் சிவகுமார் வீட்டுக்கு சென்று, ஆலோசனை நடத்தினார்.காங்கிரசுக்கு முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டால், யாரை முதல்வராக்குவது என்ற ஆலோசனையும் துவங்கி உள்ளது.இந்நிலையில், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வரும், பகுஜன் சமாஜ் கட்சி, எம்.எல்.ஏ., மகேஷ், இரண்டு நாட்களாக சட்டசபைக்கு வரவில்லை. முயற்சிஅதனால், நம்பிக்கை ஓட்டெடுப்பில் அவர் பங்கேற்க மாட்டார் என, தகவல் வெளியானது.


இதை மறுத்துள்ள, பகுஜன் சமாஜ் மேலிடம், 'மகேஷ், நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்று, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிப்பார்' என, நேற்று இரவு அறிவித்தது. அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை நிராகரிக்கும் படி, சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதன் மூலம், அரசை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியிலும் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கிஉள்ளனர்.


மருத்துவமனையில் சேருவாரா?கூட்டணி கட்சிகளின், எம்.எல்.ஏ.,க்களை சமாதானம் செய்ய முடியவில்லை. மற்றொரு பக்கம், உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடக்கிறது. எனவே, நம்பிக்கை ஓட்டெடுப்பை தள்ளி வைக்கும் முயற்சியாக, முதல்வர் குமாரசாமி, தன் உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி, மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
22-ஜூலை-201915:20:27 IST Report Abuse

Rajanயோவ் நீங்க எப்படியோ போங்க ,சூசைக்கு சேர வேண்டியதை குடுத்திடுங்க ஆமாம்

Rate this:
Girija - Chennai,இந்தியா
22-ஜூலை-201912:36:51 IST Report Abuse

Girijaஇதில் ஆதாயம் கிரண் பேடிக்கு தான், கவர்னர் சொல்லியும் முதல்வர் சபாநாயகர் கேட்காததால், இதை முன் உதாரணம்காட்டி கவர்னரின் அதிகாரம் இனி கூடுதலாக்கப்படும். சட்டசபையை சஸ்பெண்ட் செய்து கவர்னர் ஆட்சி கொண்டுவரமுடியும். இனி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் கவர்னர் தயவு ஆளும்கட்சிக்கு தேவை, நாராயணசாமி மிஸ்டர் நாராயணசாமி பாண்டிச்சேரியில் மந்திரி சபை கவிழ்ப்புகள் சர்வ சாதாரணம்.

Rate this:
sankar - ghala,ஓமன்
22-ஜூலை-201910:08:58 IST Report Abuse

sankarஇதில் இருந்து தெரிந்து விட்டது இது சித்தராமையா ஓட சித்து விளையாட்டு என்று, தான் மீண்டும் முதல் அமைச்சர் ஆவதற்கு தன்னோட அதரவாளர்களை ராஜினாமா செய்ய சொல்லி கேம் விளையாடி இருக்காப்ல , காங்கிரஸ் கு முதல்வர் பதவி என்றதும் அதிருப்தி MLA கள் திரும்ப வந்து விடுவார்கள். இதில் குமாரசாமியின் நிலைமை கசாப்பு கடைக்காரனை நம்பிய ஆடு விட மோசம் ஆயி விட்டது . வாழ்க தமிழர்கள் மூட்டு கொடுத்த ஜனநாயகம் .

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X