அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக அரசின் கடன் ரூ.3.26 லட்சம் கோடி

சென்னை:தமிழக அரசின் கடன் நிலுவை தொகை, 3.26 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. தமிழக அரசின், 2017 -- 18-ம் ஆண்டு நிதிநிலை மீதான, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கை, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

 தமிழக அரசின், கடன்,  ரூ.3.26 லட்சம் கோடி


அந்த தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2017 - 18-ம் நிதியாண்டில், தமிழக அரசின் மொத்த வருவாய், 1 லட்சத்து, 46 ஆயிரத்து, 280 கோடி ரூபாய். அதில், 93 ஆயிரத்து, 737 கோடி ரூபாய் வரி வசூலிலும், மற்றவை, வரி அல்லாத வகையிலும் கிடைத்துள்ளன. வருவாய் செலவினம், 1 லட்சத்து, 67 ஆயிரத்து, 874 கோடி ரூபாய்; 21 ஆயிரத்து, 594 கோடி ரூபாய் பற்றாக்குறை.கடந்த, 2016 - -17ம் நிதியாண்டு முடிவில்,

2 லட்சத்து, 83 ஆயிரத்து, 394 கோடி ரூபாயாக இருந்த கடன், 2017 - 18-ம் ஆண்டு முடிவில், 3 லட்சத்து, 26 ஆயிரத்து, 518 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரே ஆண்டில், 15.22 சதவீதம் கடன் அதிகரித்து உள்ளது.பள்ளி கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலை கல்வி மேம்பாட்டுதிட்டம் போன்ற வற்றை நடைமுறைப்படுத்த, 1,627 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அது பயன்படுத்தப்படவில்லை.நிலங்களை கையகப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதால், 'டெண்டர்'கள் முடிக்கப்படவில்லை. அதனால், நெடுஞ்சாலை பணிகள் ஸ்தம்பித்து உள்ளன. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில், 1,022 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு, 2016 - -17ம் நிதியாண்டில், 11 ஆயிரத்து, 216 கோடி ரூபாய் நிதியுதவி வழக்கப்பட்டது. இது, அடுத்த ஆண்டில், 8,911 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், மத்திய அரசின் மானியங்களை, தமிழக அரசால் பெற முடியவில்லை. அதனால், நிதியுதவியின் அளவு குறைந்து உள்ளது.மின் வாரிய மூலதன நிதியில், கடலோர பேரிடர் துயர் தணிப்பு திட்டத்தில்,

Advertisement

புயலால் பாதிக்கப்படாத, மின் இணைப்பு அமைக்கும் திட்டத்தை அமல்படுத்தவில்லை. அதனால், 1,493 கோடி ரூபாய் வீணானது. குடிமராமத்து மற்றும் மறு சீரமைப்பு பணிகள், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அணைகளை புனரமைக்கும் திட்டம் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, 1,729 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை.காவிரி பாசன பகுதியில், தட்பவெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்கும் திட்டம், நவீன பாசன வேளாண்மை திட்டம், நீர் பாசன கட்டமைப்புகளை புதுப்பித்தல், நீர்வள மேலாண்மை போன்ற பணிகள், திட்டமிட்டபடி நடக்கவில்லை.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
23-ஜூலை-201917:18:58 IST Report Abuse

Poongavoor RaghupathyBoth these Dravidian has done two major achievements in Tamilnadu. Public money taken to some families in the Parties and the Tamilnadu is in serious debt with more 3 lakh crores.In Tamilnadu nook and corner Liquor shops TASMAC is ed and spoiled the people physically and mentally. But the poor people are unable to get water for their daily life. If this is Dravidian culture why Tamilnadu people want these Dravidian Parties to rule Tamilnadu. It is now upto the people of Tamilnadu to choose a better Party and a Leader like Kamaraj , Kakkan, Venkatraman or C.Subramaniam to come out of their problems. Tamilnadu people have seen enough of these Dravidian Parties and it is high time a Govt change is required for people of Tamilnadu if they want their miseries to come down.

Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201919:16:38 IST Report Abuse

Rajagopalஎல்லாரும் நெறைய சாராயம் வாங்கி குடிங்கப்பா. ஊட்டுலப் பொம்பளைங்களுக்கும், கொழந்தைகளுக்கும் வாங்கி குடுங்க. டாஸ்மாகில நெறைய பணம் வந்தா இந்தக் கடன்களை சொலபமா அடச்சிரலாம். வாங்க நம் தமிழ் மக்களே நம் மாநாட்டக் காப்பாத்துங்க.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஜூலை-201916:18:02 IST Report Abuse

Endrum Indianஇவங்க ஆட்சி முடியறதுக்குள்ளே ஒரு ரவுண்டு பிகர் பண்ணிருவாங்க அதாவது 5 லட்சம் கோடி என்று சொல்லுங்கள், அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் அவன் ஒழிந்தான் அல்லது இவர்கள் எங்கு கடன் பெற்றார்களோ அவர்களுக்கு பெரிய சங்கு ஊதப்படும் அப்படித்தானே??????/

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X