பொது செய்தி

தமிழ்நாடு

இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா!அத்திகடவு-அவிநாசிக்கு 50 ஆண்டு போராட்டம்

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
 இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா!அத்திகடவு-அவிநாசிக்கு 50 ஆண்டு போராட்டம்

தமிழக ஏரிகள், கிராமத்தின் பன்முகத் தேவையை பூர்த்தி செய்யும் களஞ்சியங்கள். அவை, பாசன கட்டமைப்புகள் மட்டுமல்ல; மீன் வளர்ப்பு பண்ணையுமாகும். மேலும், மழைநீர் சேகரிக்கும் குட்டைகள்; உரமான வண்டலை உருவாக்கும் வங்கிகள்; நிலத்தடி நீரை காக்கும் ஊற்றுக்கால்கள்; சுற்றுப்புறத்தை பசுமையாக பாதுகாக்கும் நீர்ப்பெருக்குகள்; அது பாசனக் குளங்கள்!டாக்டர் ஜான் ஆம்ளர், அமெரிக்க நீரியல் ஆய்வாளர்

தமிழக பொதுப்பணித் துறையின், முன்னாள் தலைமை பொறியாளர், அ.வீரப்பன், தமிழகத்தின் நீர்ப்பாசன கட்டமைப்புகள் குறித்து, தன் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார்...தமிழகத்தில், பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு, மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.

மறுப்பு

காவிரி தண்ணீரை கர்நாடகாவும், பாலாற்று தண்ணீரை ஆந்திராவும், தர வேண்டிய அளவில் தராமல் ஏமாற்றுகின்றன. கேரளாவோ, முல்லை பெரியாற்றிலும், நெய்யாற்றங்கரையின் வலது கால்வாயிலும், நமக்கு வழங்க வேண்டிய நீரை தர மறுக்கிறது.
இந்நிலையில், தமிழகத்துக்கு பெய்ய வேண்டிய, வான் மழை ஓரளவு நம்மை காப்பாற்றியே வந்திருக்கிறது. என்றாலும், நமக்கான தண்ணீர் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.தண்ணீரை தன் ராட்சத வாயால் உறிஞ்சும், பன்னாட்டு கார் தயாரிப்பு உள்ளிட்ட பெருநிறுவனங்களே, இதற்கு காரணம். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம், அரசே ஆற்று மணலை சுரண்டி விற்கிறது. ஆனால், நம் பழந்தமிழர்கள், என்ன செய்தனர் தெரியுமா?
குழிவான பகுதிகளில் எல்லாம் ஏரி, குளங்களை வெட்டி பராமரித்தனர். அச்செயலை, அறச்செயலாக கருதினர். அச்செயல்களை, கல்வெட்டுகளும், இலக்கியங்களும் புகழ்கின்றன. அதாவது, 2,000 ஆண்டுகளுக்கு முன், ஆழம் காண முடியாத மணல் படுகையில், பெருங்கற்களால், கரிகாலன் கட்டிய கல்லணையை, உலக இன்ஜினியர்கள் வியக்கின்றனர். பாண்டியன், 20 அடி உயரத்தில், மலைப்பாறைகளை உடைத்து, நீண்ட கற்களை அடுக்கி, அணைகளை கட்டினான்; மேலும், 3.25 கி.மீ., கால்வாயையும் வெட்டினான்.
மூவேந்தர்

வறட்சியால் தவித்த நாஞ்சில் நாட்டில், மார்த்தாண்டவர்மனால் உருவாக்கப்பட்ட, புத்தன் அணை மற்றும் புத்தனாறு என, மூவேந்தர்களும் பெரிய திட்டங்களை செயல்படுத்தினர். இச்செய்திகளை எல்லாம், மூத்த இன்ஜினியர்களான, எஸ்.எம்.ரத்தினவேல், எஸ்.என்.கள்ளபிரான், பழ.கோமதி நாயகம் உள்ளிட்டோர் ஆய்வு செய்து, நுால்களாக பதிவு செய்துள்ளனர்.

'புதிய நீர்; பழைய மொந்தை' என்பது போல, செம்பரம்பாக்கம், வீராணம், உத்திரமேரூர், மதுராந்தகம், தென்னேரி, கங்கை கொண்ட சோழபுரத்தின் சோழகங்கம், காவேரிப்பாக்கம், ராஜசிங்கமங்கலம், பெருமாள் ஏரி, துாசி மாமண்டூர் ஏரி, ராமநாதபுரம் பெரிய ஏரி என, பழமையான ஏரிகள், இன்றும், மழைநீரை சேமித்து, மக்களின் பயன்பாட்டுக்கு உதவுகின்றன.அந்த கால அரசர்கள், ஏரிகளை பராமரிக்க, ஏரி வாரியம் அமைத்து, ஏரிப் பணியாளர்களாக நீர்க்கட்டிகள், மடைகோலுவோர், நீர்ப்பாய்ச்சிகள், காவல்காரர் உள்ளிட்டோரை நியமித்து, சிறப்பாக பாதுகாத்தனர்.
இந்த பொறுப்புகள், அந்தந்த ஊராரின் வசமிருந்தன. ஊராரின் ஒத்துழைப்போடு, குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடந்தன.நீர்ப்பாசனம் பற்றி அறியாத நாட்டில், பிரிட்டிஷ் அரசு அமைந்த பின், நீர்நிலைகள் பராமரிக்கப்படாமல் விடப்பட்டன. அப்போது, ஜமீன்தார்கள் தான், ஏரிகளை காத்து வந்தனர்.நாடு சுதந்திரம் அடைந்த பின், நதிகளின் குறுக்கே, பெரிய அணைகள் கட்டப்பட்டன. அவற்றில் இருந்து, தொலைதுாரங்களுக்கு, பாசனக் கால்வாய்கள் வெட்டப்பட்டன. இதற்காக, பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. இவ்வாறு, 25க்கும் மேற்பட்ட பேரணைகள் கட்டப்பட்டன.
அணைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், ஏரி, கண்மாய்களை சீரமைக்க, தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும், 1965 முதல், 1974 வரை, தமிழக பொதுப்பணித் துறை உருவாக்கிய, உணவு உற்பத்தி பிரிவு, ஏரி, குளங்களை துார் வாரியது என்பதை மறுக்க முடியாது. அந்த பிரிவு தான், மதகுகள், கலிங்குகள், வாய்க்கால்கள், மறுகால் ஓடைகள் உள்ளிட்டவற்றையும் சீரமைத்தது.


சீரமைப்பு
கடந்த, 1990, 1998ம் ஆண்டுகளில், ஐரோப்பிய பொருளாதார கமிஷன், 75 கோடி ரூபாய் நிதி வழங்கியது. அதில், நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், 200 ஏக்கருக்கு மேல் பாசன வசதியுடைய, 649 ஏரிகள் மேம்படுத்தப்பட்டன. 1999ல், நபார்டு வங்கி வழங்கிய, 226 கோடி ரூபாய் கடனில், 109 ஏரிகள் சீரமைக்கப்பட்டன.அதே காலகட்டத்தில், உலக வங்கியின் கடனில், நீர்வள ஆதாரத் திட்டத்தின் படி, 621 ஏரிகள், 1,402 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டன.
கடந்த, 2004 முதல், 2014 வரை, நீர்வளத் திட்டம், பிரதமரின், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களால், பல ஏரி, குளங்கள், ஆங்காங்கே துார்வாரப்பட்டன.என்றாலும், எந்த ஒரு ஏரி, குளமும் முழுமையான திட்ட வரைவு, மதிப்பில், முறையாக துார் வாரப்படவில்லை என்பது தான் உண்மை.ஆனால், ஆந்திர அரசு, 2000 முதல், 2013 வரை, 'ஜலயக்ஞம்' எனும், 'தண்ணீர் வேள்வி' திட்டத்திற்காக, 1.86 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது.
அதில், பல்வேறு நீர்நிலைகளின் மேலாண்மை பணிகளை நிறைவேற்றி உள்ளது.ஆந்திராவில் இருந்து பிரிந்த, தெலுங்கானா அரசு, 'மிஷன் காகதீப்' என்ற திட்டத்தை ஏற்படுத்தியது. இதற்காக, 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. அதில், 44 ஆயிரத்து, 300 ஏரிகள் சீரமைக்கப்பட்டன.
திட்டம்

கர்நாடக அரசு, 1980 முதல், பேரணைகள், சிற்றணைகள் என கட்டி, ஆற்று நீரை, ஏரி, குளங்களுக்குள் பாய்ச்சி சேமிக்கிறது. ஆனால், தமிழகத்தில், 960 கோடி திட்ட மதிப்பில் அறிவிக்கப்பட்ட, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக, 50 ஆண்டுகளாக குரல் கொடுக்கிறோம்.தமிழகத்தில், 39 ஆயிரத்து, 202 ஏரிகள், கண்மாய்கள் இருப்பதாக, தமிழக பொதுப்பணித் துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில், 18 ஆயிரத்து, 789 ஏரிகள், 100 ஏக்கர் ஆயக்கட்டுக்கு அதிகமாக உள்ளதால், பொதுப் பணித்துறையின் பொறுப்பில் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்களின் பொறுப்பில், 100 ஏக்கர் ஆயக்கட்டுக்கு குறைவாக உள்ள, 20 ஆயிரத்து, 413 ஏரிகள் உள்ளன; இல்லை, பொறுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் நிலை என்ன? நாளைய கட்டுரையில்.-

நடுவூர் சிவாnaduvoorsiva@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-201907:07:13 IST Report Abuse
Nagarajan Duraisamy அத்திக்கடவு அவிநாசி திட்டம் கேட்பதற்கு முன், திருப்பூர் பகுதியில் நிலத்தடி நீரின் தன்மை ஏன் இவ்வளவு நச்சு மிகுந்ததாக உள்ளது என்று கேளுங்கள். அதற்கு காரணமானவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் ? டாலர் தான் முக்கியம் என்று சாய கழிவுகளை நீர்நிலைகளில் கலந்து வெறியாட்டம் போட்ட மக்கள் வாழும் பூமிக்கு அரசு செலவில் ஏன் வெளியூரிலிருந்து தண்ணீர் தர வேண்டும் ? அங்கு ஜெயலலிதா ஆட்சியில் சாய கழிவுகளை சட்ட விரோதமாக கையாண்ட நிறுவங்களுக்கு பூட்டு போட முயன்ற போது, சுற்றியிருக்கும் பல ஊர்களிலும் சட்ட விரோதமாக தொழில் துவக்கி வெறியாட்டம் போட்டனர். மேலும் 30 வருடமாக இவ்வாறு செய்து சம்பாதித்த பணத்தை சுருட்டி வைத்து கொண்டு, அரசு செலவில் சாய கழிவு மறு சுழற்சி செய்ய திட்டம் வேண்டுமென்று போராடினர். இது நியாயமா ?
Rate this:
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
22-ஜூலை-201904:31:50 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj ஆபாசமான கருத்து அல்ல பாசமான கருத்து இதை தடை செய்யும் தினமலர் ஊழியர் தனது ஊரில் நிறைய ஆக்கிரமிப்பு செய்துள்ளார் போலும் அதனால் அவருக்கு சற்று தடை செய்யும் எண்ணம் அதிகம் உள்ளது ஆனால் அவர் ஆண்டவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்
Rate this:
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
22-ஜூலை-201904:30:14 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj காஞ்சிபுரம் ஊராட்சி ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கும் பஞ்சாயத்து எழுத்தர் கைவசம் உள்ளது காஞ்சிபுரம் நகராட்சி ஆக்கிரமிப்பு செய்யும் அரசியல்வாதிகள் கையில் உள்ளது அதனால் காஞ்சிபுரம் நீர்நிலை ஆதாரங்கள் வாய்க்கால் புறம்போக்குகள் பொதுஇடங்கள் சாலைகள் வீதிகள் என அனைத்தும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிக் கொண்டே செல்லுகிறது அண்ணாவை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் அண்ணா பிறந்த ஊர் சின்னா பின்னமாக்கிக்கொண்டு வருவோரைப்பற்றி கவலை கொள்வதே இல்லை சங்கரமடத்திற்கு அடிக்கடி வருவோரும் காஞ்சிபுரம் சங்கடத்திற்கு உள்ளக்கிக் கொண்டு வருவதை கண்டு கொள்ளுவதும் இல்லை மாட்டா நிர்வாகம் மடடமான நிர்வாகம் புரிந்து வருகிறது காஞ்சிபுரம் விரைவில் காஞ்சி போன புரம் எனும் பெயர் மாற்றம் செய்யப்படலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X