பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நதிகள் தூய்மைக்கு ரூ.5,800 கோடி ஒதுக்கீடு

புதுடில்லி:நாடு முழுவதும், 16 மாநிலங்களில், 34 நதிகளை தூய்மைபடுத்த, 5,870 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

 நதிகள், தூய்மைக்கு, ரூ.5,800 கோடி, ஒதுக்கீடு


லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பபுல் சுப்ரியோ கூறியதாவது:நாடு

முழுவதும் உள்ள நதிகளை தூய்மைபடுத்துவதற் காக, தேசிய நதி பாதுகாப்பு திட்டம் உருவாக்கப் பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு, 5,870 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதில், மத்திய அரசு, தன் பங்காக, மாநிலங்களுக்கு, 2,522 கோடி ரூபாய் அளித்துள்ளது.தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நதிகளை தூய்மைபடுத்துவது குறித்து, மாநில அரசுகளிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இது குறித்த, மத்திய மாசு கட்டுப்பாட்டுவாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம், சோதனை நடத்தி, நீரின் தரம் குறித்து ஆராயப்படுகிறது.நாடு முழுவதும்,16 மாநிலங்களில் உள்ள, 77 நகரங் களில் பாயும், 34 நதிகளை தூய்மைபடுத்தும் பணி

Advertisement

நடந்து வருகிறது.அதேபோல், பல்வேறு மாநிலங்களில், மாசடைந்துள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை மீட்கவும், 181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
22-ஜூலை-201919:50:05 IST Report Abuse

JSSகூவத்தில் சில 100 கோடிகளை கொட்டி பிறகு அந்த கோடிகளை சுட்டு அதனை சுட்டி காட்டிய பொது கணக்கு அறிக்கையை குப்பையில் வீசி திமுகவினரிடம் மீண்டும் கூவத்தை சுத்தம் செய்யும் பணியை மத்திய அரசு கொடுக்க கூடாது. கூவம் நாறி கொண்டு இருப்பதன் காரணமே திமுகதான். எவ்வளவு பணம் கொட்டினாலும் நாற்றம் தன மிஞ்சும். கூவம் நாற்றமும் ஊழல் நாற்றமும் ஒன்றுக்கொன்று போட்டியிடும்

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
22-ஜூலை-201917:32:25 IST Report Abuse

சுந்தரம் ஏற்கனவே செல்வி உமா பாரதி கங்கையை சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய்களில் தூய்மை செய்துவிட்ட அனுபவத்தை கேட்டு பெறலாம்.

Rate this:
veeraraghavan - thiruvarur,இந்தியா
22-ஜூலை-201918:56:26 IST Report Abuse

veeraraghavanநண்பர் சுந்தரம், கங்கைக்கு 5 வருடத்துக்கு போய் இருக்கீங்களா , இப்போ போய் இருக்கீங்களா . நிறைய சுத்தம் ஆகியிருக்கு . 60 வருடமா கலக்கர கழிவுகள், இன்னும் இரண்டு வருடங்களில் முழுவதுமாக முடிவடையும் . கும்பமேல போனவர்களை கேளுங்க சொல்லுவாங்க அதோடு இல்லாமல், கப்பல் போக்குவரத்து தொடங்கி 12 மாதம் ஆகிருது ...

Rate this:
Yezdi K Damo - Chennai,இந்தியா
22-ஜூலை-201913:41:33 IST Report Abuse

Yezdi K DamoBJP can go for a big number . This is not even enough for morning tea.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X