பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஒரே நேரத்தில் இரண்டு பட்டம்
ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு

புதுடில்லி:ஒரே நேரத்தில், ஒரே பல்கலை அல்லது வெவ்வேறு பல்கலைகளில், இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க அனுமதிப்பது தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு அமைத்து உள்ள சிறப்பு குழு ஆய்வு செய்கிறது.

 ஒரே நேரத்தில், இரண்டு ,பட்டம்,ஆய்வு செய்கிறது, யு.ஜி.சி., குழு


ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் படிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, யு.ஜி.சி., சார்பில், 2012ல், ஒரு குழு அமைக்கப்பட்டது.ஐதராபாத் பல்கலை துணை வேந்தராக இருந்த,

பர்ஹான் குமர் தலைமையிலான அந்த குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது. 'ஒரு பல்கலையில், முழுநேரமாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர், அதே பல்கலை அல்லது வேறொரு பல்கலையில், தொலைநிலை மூலம், மற்றொரு பட்டப் படிப்பைபடிக்க அனுமதிக்கலாம்' என, அந்த குழு ஆலோசனை வழங்கியது.இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் செயல்பட்டு வரவில்லை.


இந்நிலையில், ஒரே நேரத்தில், இரண்டு பட்டப் படிப்புகள் படிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பாக, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி., துணைத் தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையிலான இந்தக் குழு, கடந்தமாதம் அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டமும் நடந்துள்ளது.இது குறித்து, யு.ஜி.சி., அதிகாரிகள் கூறியதாவது:தற்போது தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.தொலைநிலை, அல்லது பகுதி நேரமாக, ஒரு

Advertisement

பல்கலையில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர், அதே பல்கலை அல்லது மற்றொரு பல்கலையில், மற்றொரு பட்டப் படிப்பை படிப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்து, இந்தக் குழு ஆய்வு செய்கிறது.


வழக்கமான பட்டப் படிப்புடன், சிறப்பு அல்லது தனி திறன் பட்டப் படிப்பையும் படிக்க, மாணவர்கள் விரும்புகின்றனர். அதனால், இது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-201915:21:20 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இரண்டு அல்ல அதற்கு மேற்பட்ட பட்டம் படிக்க கூட அனுமதி கொடுங்க , ஒரே நேரத்தில் பொறியியல் , மருத்துவம் இரண்டும் படித்து பட்டம் பெற்றுக்கொள்கிறோம் , அதே நேரம் நுழைவு தேர்வு , செமஸ்டர் தேர்வு , ஆண்டு தேர்வு எல்லாம் கூடாது , இறுதியாண்டில் பட்டம் கொடுத்துவிடவேண்டும்.

Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
22-ஜூலை-201913:07:15 IST Report Abuse

Nallavan NallavanDual Degree சிஸ்டம் என்று ஏற்கனவே இருந்ததே ??

Rate this:
Girija - Chennai,இந்தியா
22-ஜூலை-201913:29:53 IST Report Abuse

Girijaசார் அது இப்போதும் உள்ளது ஒரே துறையை சார்ந்த படிப்பு அது . ...

Rate this:
Girija - Chennai,இந்தியா
22-ஜூலை-201913:01:05 IST Report Abuse

Girijaபல்வேறு துறைகளில் அதிகம் படித்தவர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன், என் அனுபவத்தில் பார்த்தது, சி ஏ பிளஸ் இன்ஜினியரிங், எம் பில் (அறிவியல் இலக்கியம் சட்டம் என்று) பிளஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்று படித்தவர்கலின் பணித்திறன் மற்றும் புரிதல் மிகவும் குறைந்து விடுகிறது . கம்ப்யூட்டரில் ஸ்க்ரீன் சேவர் வருவது போல், மீட்டிங் அல்லது பேச்சவார்த்தை நடக்கும் போது திடிரென்று அவர்கள் சிந்தனை எங்கோ சென்றுவிடும், ஆள்தான் சீட்டில் இருப்பார், சிந்தனைகள் எங்கோ சென்றுவிடும், பிறகு திடிரென்று விழித்துக்கொண்டு சம்பந்தம் இல்லாமல் உளற ஆரம்பிப்பார்கள், மற்றவர்கள் நமட்டு சிரிப்பு சிரிப்பார்கள், பார்க்கவே பாவமாக இருக்கும். முதலில் பட்டினி கிடப்பவர்களுக்கு ஒரு வேளையாவது உணவு அளியுங்கள். காலை டிபன் காபி , மதியம் சாப்பாடு, மாலை ஸ்னாக்ஸ் காபி, டி, இரவு சாப்பாடு அனைத்தையும் ஒரே வேளையில் சாப்பிடமுடியுமா? அப்படி சாப்பிட்டால் என்னவாகும்? அதே போல் தான் படிப்பும், சரியான அணுகுமுறையில் படித்தால் தான் சிறப்பாக செயலாற்றமுடியும்,

Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
22-ஜூலை-201915:33:49 IST Report Abuse

Nallavan Nallavanநீங்கள் சொல்லும் கவனிக்கும் திறனில் பாதிப்பு என்பது இன்று பலருக்கும் உள்ளது ..... இதில் ஐடி துறை, மற்ற துறைகள் என்கிற வேறுபாடு இல்லை .... ...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஜூலை-201918:04:24 IST Report Abuse

ஆரூர் ரங்எஞ்சினீரான சுஜாதா (எஸ் ரங்கராஜன் ) ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தையும் உருவாக்கினார். நம்பர் ஒன் கதாசிரியராகவும் விளங்கினார் .ஓவியம் ரங்கோலி மற்றும் இசைத்திறனுள்ள டாக்டர்களைப் பார்த்திருக்கிறேன் . இன்று சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள Dr சௌமியா இசையில் டாக்டர் பட்டம் பெற்றவர் அதற்கு முன்பே சென்னை ஐ ஐ டியில் வேதியியல் எம் எஸ் சி தங்கப்பதக்கத்துடன் தேறியவர். எனவே இருவேறு துறைகளில் ஒருவர் சிறந்து விளங்குவது சாத்தியமே ...

Rate this:
Girija - Chennai,இந்தியா
22-ஜூலை-201920:50:57 IST Report Abuse

Girijaநானும் சுஜாதாவின் ரசிகை தான், அவரது படிப்பும் மற்றும் தொழில் என்ஜினீயர், தேசிய கீதத்தை அஸ்ஸம்ப்ளேர் மொழியில் எழுதி பாடவைத்தவர். ஹாபி கதை எழுதுவது குழப்பிக்கொள்ள வேண்டாம். ஹாபி யிலும் பட்டம் பெறலாம் ஆனால் ஒரே நேரத்தில் இல்லை. டாக்ட்டர் சவுமியாவும் அப்படித்தான் செய்துள்ளார். சீர்காழி சிவசிதம்பரம் இன்னொரு உதாரணம். மற்றொரு துறையில் தேர்ச்சி என்பது தனித்தனி காலகட்டத்தில் செய்தால் தான் நல்லது, சவுத் ஆப்பிரிக்கா டி வில்லியர்ஸ் பற்றி படியுங்கள் அவர் கிரிக்கெட் ரஃபிய் இன்ஜினியரிங் சி ஏ என்று தூள் கிளப்பியவர் ஆனால் டெண்டுல்கர் போல டோனி போல வரமுடியவில்லை. ...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X