மதுார் கூட்டுச்சாலையில் நிழற்குடை வசதி தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுார் கூட்டுச்சாலையில் நிழற்குடை வசதி தேவை

Added : ஜூலை 21, 2019
Share

உத்திரமேரூர் : மதுார் கூட்டுச்சாலையில், நிழற்குடை வசதி இல்லாததால், பயணியர் சிரமப்படுகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- - சாலவாக்கம் சாலையில், மதுார் கூட்டுச்சாலை உள்ளது.

சித்தாலப்பாக்கம், சிறுமயிலுார் உட்பட, பல கிராமங்களைச் சேர்ந்தோர், மதுார் கூட்டுச்சாலைக்கு வந்து, அங்கிருந்து பஸ் பிடித்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.மதுார் கூட்டுச்சாலையில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பயணியர் நிழற்குடை, சிதிலமடைந்து, கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.இதனால், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணியர், மழை, வெயில் காலத்தில், மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து மதுார் கிராமத்தினர் கூறியதாவது:காலை, 5:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, நகர்புறம் மற்றும் கிராமங்களுக்கு செல்ல, ஏராளமான பயணியர், இந்த பஸ் நிறுத்தத்தில் நிற்கின்றனர்.நிழற்குடை வசதி இல்லாததால், மாணவர்கள் உட்பட பலதரப்பினரும், மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, புதிய நிழற்குடை கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X