அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
200 தொகுதிகளில் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கை

தேனி:''சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்,'' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

 200 தொகுதிகளில்,வெற்றி ,ஸ்டாலின், நம்பிக்கை


அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலராக இருந்த, தங்க தமிழ்ச்செல்வன், சமீபத்தில், தி.மு.க.,வில் இணைந்தார். இதற்கான இணைப்பு விழா, தேனி அருகே, வீரபாண்டியில் நடந்தது.
தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள், ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். ஸ்டாலின் பேசியதாவது:அரசின் செலவில், எம்.ஜி.ஆர்., நுாற்றுாண்டு விழா

கொண்டாடினர். அவர்களுக்கு, எம்.ஜி.ஆரை சிறப்பிக்கும் உணர்வு இல்லை.இ.பி.எஸ்., - பன்னீர் செல்வம்,தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள விழாவை பயன்படுத்தினர்.ஜெ


யலலிதா படத்தை பாக்கெட்டில் வைத்து, பதவி சுகத்தை அனுபவிக்கவும், ஊழல் செய்யவும், லஞ்சம் வாங்கவும் பயன்படுத்து கின்றனர். பதவிக்காக மோடியிடமும், அமித்ஷாவிடமும், தலையாட்டி பொம்மையாக, கூனிக்குறுகி ஆட்சி நடத்துகின்றனர்.



தி.மு.க., இழுபறியான ஆட்சி செய்ய விரும்ப வில்லை. சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளில்வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேர்தல்வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்து, தி.மு.க., நிறைவேற்றும். ஜெ., இருந்தவரை, 'நீட்' வர விடவில்லை.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'நீட்' வருவதை தடுப்போம் என்றனர். இப்போது,

Advertisement

'நீட்' வந்து விட்டதே. தொடர்ந்து, 'நெக்ஸ்ட்' தேர்வும் வந்துள்ளது.


லோக்சபாவில், தி.மு.க., கூட்டணியின், 38 எம்.பி.,க்கள் என்ன சாதிக்க போகின்றனர் என்றனர்.ஒரு மாதத்தில், பள்ளிக்கல்வியில் ஹிந்தி கட்டாயம் என்பதை, திரும்ப பெற வைத்தனர். தபால் துறை தேர்வை ரத்து செய்து, தமிழில் நடத்தப்படும் என, அறிவிக்க வைத்தனர்.இவ்வாறு, அவர்பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
26-ஜூலை-201903:14:39 IST Report Abuse

TAMILANஒரு நூற்று ஐம்பது தொகுதிகளில் தமிழ் பேசி தமிழ் பெயர் வைத்து தமிழனாக நடித்துக்கொண்டிருக்கும் தெலுங்கர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
24-ஜூலை-201911:03:54 IST Report Abuse

Cheran Perumal234 தொகுதிகளிலும் ஜெயித்து அந்தந்த தொகுதிகளை ஜெயிக்கும் எம் எல் ஏக்களுக்கு பட்டா போட்டு கொடுத்துவிடுவார்கள். அவர்களிடமிருந்து ஸ்டாலின் குடும்பம் மாதா மாதம் கப்பம் வசூலிப்பார்கள். தமிழனின் பொற்காலமாக அது இருக்கும்.

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஜூலை-201910:35:54 IST Report Abuse

Natarajan Ramanathan200 தொகுதிகளில் வெற்றியா?.......சுடலை அவநம்பிக்கை என்று இருந்தால் நம்பலாம்

Rate this:
மேலும் 76 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X