சிவகங்கை : முதல்பருவ தேர்வு துவங்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இன்னும் முதல் பருவ பாடபுத்தகங்கள் வழங்கவில்லை. கல்வி அதிகாரிகள் விரைந்து புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சிவகங்கையில் நடந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினர்.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னச்சாமி தலைமை வகித்தார். பொருளாளர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர்கள் திருமுருகன், கர்ணா, ஜெயராமன், சேகர், முத்துப்பாண்டி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தீர்மானம்: அனைத்து வகுப்புகளுக்கும் வழங்கப்படாமல் உள்ள முதல் பருவ பாடபுத்தகங்களை விரைந்து வழங்க வேண்டும். ஆசிரியர் பயோ மெட்ரிக் வருகை பதிவில் இந்தியை திணிப்பது கண்டிக்கதக்கது. பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் இணையதள வசதி கிடைக்கவில்லை. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 43 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி ஆண்டு ஆய்வின் போது குழு ஆய்வு முறையை கைவிட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணபலன், சம்பள ஆவணங்கள் பலமாதங்களாக கிடப்பில் உள்ளது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். ஆசிரியர் தினவிழாவில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியருடன், ஆசிரியர்களையும் கவுரவிக்க வேண்டும் என தீர்மானித்தனர். மாவட்ட நிர்வாகி ஹரிஹரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE