அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய கிளைகள் துவக்க தே.மு.தி.க., தீர்மானம்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 புதிய கிளைகள் துவக்க தே.மு.தி.க., தீர்மானம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் முத்துவெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், விஜயகாந்தின் பிறந்த நாளான ஆக., 25ல், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது. ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வதுடன் பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கட்சியின், 16வது துவக்க விழாவையொட்டி, புதிய கிளைகளை துவக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து இக்கூட்டத்தில், மாநில துணைச் செயலாளர் அக்பர், மாவட்ட அவைத்தலைவர் தங்கவேல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், தலைவர் ராகவானந்தன், பொருளாளர் கணேஷ், துணைத்தலைவர்கள் கருப்பசாமி, ரகமத்துல்லா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-ஜூலை-201912:11:22 IST Report Abuse
Girija இன்னுமா அங்க பொழுதுபோக்குறீங்க ? வீட்டுக்கு நாலு காசு சம்பாதிச்சு குடுங்க வேலையை பாருங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X