பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கனமழை எச்சரிக்கை

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (6)
Advertisement
மழை, சென்னை , வானிலை மையம், வெப்பச்சலனம்

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக சில மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை22) கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் வங்க கடலின் மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியிலும் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி கோவை அடுத்த சின்ன கல்லாரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பூண்டி நீலகிரி தேவாலாவில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-ஜூலை-201912:37:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni நல்லிதயங்களின் வேண்டுதல்களால் மழை பொழியுதுங்கோ இதுலே எந்த கூமுட்டை அரசியல்வாதி நாஸ்திகளுக்கும் வேண்டுதல் மகிமை புரியாது ஆனால் அவனுக்கு மனைவிகளா நாள் கிழக்கோயிலாக சுத்திண்டு திரியுறாளுக பொது ஜனங்களேதான் சிலைகளும் ஏரிகளை தூர்வாரி இருக்காங்க அதுலே மழை நீர் சேர்ந்தால் விமோசனம் கிட்டும் கோவிலே சில ஏரிகளில் நீர் நிரம்பி இருக்கும் பாத்துருக்கேன் ஆனால் அதுலே அவ்ளோ துர்வாடை அடிக்குதுங்கோ கார்லெபோறச்ச மூக்கை பொத்திக்கவேண்டிய நிலைமை கண்ராவி. தமிழ்நாட்டுலே பலஇடங்களிலே இதுபோல இந்தமாதிரி குளம்குட்டைகள் இருக்கு பலரும் நீர்நிலைகளை அசுத்தம் செய்வதால்தான் நீர் குளத்திலே வரலேன்னா ஆளும் கடிச்சி ஆளாதகடிச்சிக்கலை வாய்க்குவந்தபடி ஏசுவதும் திட்டுவதும்தான் நடைமுறையாக இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-ஜூலை-201905:02:33 IST Report Abuse
Mani . V அரசு: "நாங்கள் எவ்வளவு மழை, வெள்ளம் வந்தாலும் அதை வங்காள விரிகுடாவில் சேமிக்க தயாராகவே உள்ளோம்".
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201907:24:08 IST Report Abuse
uthappaஅப்படியா, இதில் மற்ற மாநிலங்களில் இருப்போர் முட்டாள்கள் என்று சிலர் கருத்து எழுதுறாங்க .மொத்த பேரும் இருக்கும் இடம் இப்போ தெரியுதே....
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201907:26:09 IST Report Abuse
uthappaவங்காள விரிகுடாவில் சேமிக்கும் மக்கள் , எப்படி ஆட்சிக்கு உகந்தவர்களை தேர்ந்து எடுப்பீர்கள்....
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஜூலை-201908:35:14 IST Report Abuse
ஆரூர் ரங்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைபெய்தால் எப்படி சேமிப்பது ? எந்த நீர்நிலையை உருவாக்கினாலும் கோடையில் கடல்நீர் ஊடுருவும் வாய்ப்புள்ளது என்பதால்தான் அங்கு அணைகளைக் கட்டுவதில்லை. குளங்களைக்கூட ஆழப்படுத்துவதில்லை தமிழகத்தின் முக்கிய பிரச்னையே போதிய அளவு மழைபொழிந்தாலும் கடலோரமே அதிகம் பெய்வதால் பலனில்லாமல் போகிறது .கேரளா கர்நாடகாவில் கடலருகே பாறைகள் அதிகமிருப்பதால் அங்கு இப்பிரச்னை குறைவு. ஆனாலும் அங்கு பொறுப்பில்லாமல் 400 - 500டி எம் சி நீரை கடலுக்கு விடுகின்றனர்...
Rate this:
Share this comment
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
22-ஜூலை-201904:38:08 IST Report Abuse
Indhiyan மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தாராம் போன்ற வானிலை அறிவிப்பு. ஏதோ சில இடங்களில் லேசான, சில இடங்களில் கன மழை பெய்ய(லாம்). இந்த செய்தியை வைத்து யாராவது எந்த முடிவுக்காவது வரமுடியுமா? உருப்படி இல்லாத எச்சரிக்கை. எந்த இடத்தில எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்லும் திராணி இன்னும் வரவில்லை. இஸ்ரோ துணைக்கோள்கள் வேஸ்ட். வானிலை கருவிகள் வேஸ்ட். மாதா மாதம் சம்பளம் வேஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X