சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது

திருவண்ணாமலை : 'ஜியோ' மொபைல் போன் வாங்கினால், ஹெல்மெட் தருவதாக, ஏஜன்டுகளிடம் ஆசை வார்த்தை கூறி, ரூ.1.51 கோடி வரை மோசடி செய்த மேலாளரை, போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர், சீனிவாசன், 45; மொபைல் போன் கடை வைத்துள்ளார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர், சுதாகர், 34; ஜியோ நிறுவனத்தின், ஆரணி கிளை மேலாளர். சுதாகரிடம், மொபைல் போன் விற்பனை தொடர்பாக, சீனிவாசன் மற்றும் பல்வேறு பகுதி ஏஜன்டுகள் வருவது வழக்கம். அவர்களிடம், '500 அல்லது 1,000 ரூபாய்க்கு, ஜியோ மொபைல் போன் வாங்கினால், ஒரு ஹெல்மெட் இலவசம்; விற்பனைக்கு, மொபைல் போன்கள் தேவையென்றால், தொகையை முன்பே கொடுக்க வேண்டும்' என, சுதாகர் கூறியுள்ளார்.இதன்படி, சுதாகர் மற்றும் அவரது நண்பர் பிரசாந்த் ஆகியோரது வங்கி கணக்குகளுக்கு, 12 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாயை, ஏப்ரலில், சீனிவாசன் பரிமாற்றம் செய்தார். இதேபோன்று, பலரிடமும், 1 கோடியே, 51 லட்சம் ரூபாயை சுதாகர் பெற்று, ஜியோ மொபைல் போன் மற்றும் ஹெல்மெட் தராமல், மோசடி செய்தார். பாதிக்கப்பட்ட ஏஜன்டுகள், எஸ்.பி., சிபிசக்கரவர்த்தியிடம் புகார் செய்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, சுதாகரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-201907:28:22 IST Report Abuse
ஆப்பு ஒரு 100 கோடி மோசடி செஞ்சிருந்தா டாவோஸ் செல்லும் இந்தியக் குழுவில் சென்று, அப்பிடியே ஆன்ண்ட்டிகுவா, இங்கிலாந்துன்னு செட்டில் ஆயிருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
22-ஜூலை-201904:53:52 IST Report Abuse
 nicolethomson நல்லவேளை சுதாகர் ஜியோ மீது இந்த குற்றத்தை சுமத்தும் முன்னர் போலீஸ் பிடிச்சுட்டாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X