அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இன்று சந்திக்கிறார் இம்ரான்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (8+ 71)
Advertisement

வாஷிங்டன் : மூன்று நாள், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள, அண்டை நாடான, பாகிஸ்தானின் பிரதமர், இம்ரான் கான், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பை, இன்று (ஜூலை22) சந்தித்து பேச உள்ளார்.






பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின், இம்ரான் கான், 66, முதல் முறையாக, மூன்று நாள், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், 'கத்தார் ஏர்வேஸ்' விமானம் மூலம் வாஷிங்டன் வந்த அவரை, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா முகமது குரேஷி வரவேற்றார். பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால், சிக்கன நடவடிக்கையாக, தனியார் விமானம் மூலம் வந்த இம்ரான் கான், அமெரிக்காவுக்கான, பாக்., துாதர், ஆசாத் மஜீத் கானின் அரசு இல்லத்தில் தங்கியுள்ளார்.





அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பை, இன்று சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் வலியுறுத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. தெற்காசிய நாடான, ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவும் வகையில், தலிபான் பயங்கரவாத அமைப்புடன் பேச்சு நடத்துவது குறித்தும், இருவரும் விவாதிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.





பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததால், பாக்.,குக்கு அளித்து வந்த நிதி உதவியை, டிரம்ப் நிறுத்தியுள்ளார்.அதனால், இந்தப் பிரச்னையே, இந்த சந்திப்பின்போது முக்கியமாக விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் போம்பியோவையும், இம்ரான் கான் சந்திக்க உள்ளார். இதற்கு முன், 2015ல், பாக்., பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். அதன் பின், பாக்., பிரதமர் ஒருவர், அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். இந்த சந்திப்பின்போது, நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், கடனுதவியைப் பெறுவதற்காக, சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் தலைவர்களையும், இம்ரான் கான் சந்திக்க உள்ளார்.





வாஷிங்டனின் கேபிடல்ஒன் ஏரினாவில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்கள் இடையே, இம்ரான் கான் நேற்று உரையாற்றினார். இதற்கிடையே, பாக்., கில் சிறுபான்மையினராக உள்ள மற்றும் பழங்குடியினமான, பலுாச், சிந்தி, மோஜாரி இனத்தைச் சேர்ந்தவர்கள், இம்ரான் கான் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்பை இன்று சந்திக்கிறார் இம்ரான்கான்.

Advertisement




வாசகர் கருத்து (8+ 71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-201915:46:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க நாங்க தீவிரவாதத்தை ஒழித்துவிட்டோம் , ஹபீசை கூட கைதுசெய்துவிட்டோம் ( ஏற்கெனவே ஏழெட்டு முறை இதை செய்திருக்கிறோம் , அதற்கு பிறகு அவர் சுதந்திரமாக இருப்பார் ) ஆகவே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு நிதியை வாரி வழங்குங்கள் - இதைத்தானே சொல்லப்போகிறீர்கள் இம்ரான் , இதை ட்ரம்ப் நம்ப வாய்ப்பே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
22-ஜூலை-201913:30:50 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அமெரிக்கா அதிகாரிகள் யாரும் வரவேற்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள் இம்ரான் கான் , ஏர்போர்ட்டில் உட்காரவைத்து துணியை உருவி சோதனை செய்யாமல் விட்டதே பெரிய விஷயம் ஏனென்றால் உங்கள் நாட்டின் நிலைமை அப்படி , உலகத்திற்கே தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்பவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
senthil - Bangalore,இந்தியா
22-ஜூலை-201912:57:41 IST Report Abuse
senthil சந்திச்சு மறுபடியும் பிச்சை போடுன்னு கேட்க போய் இருக்கிறாங்க . இவர்களை மறுபடியும் அமெரிக்கா நம்பினால் அமெரிக்காவுக்கும் மீண்டும் ஆப்பு காத்துகிட்டு இருக்குது . ஒசாமாவை வருஷ கணக்கில் உள்ளே வைத்து கொண்டே இல்லைன்னு நாடகம் ஆடினவனுங்க தானே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X