பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு தொழிலுக்கு ஆபத்து; மாணிக்கம் தாகூர் ஆதங்கம்

Added : ஜூலை 22, 2019
Share
Advertisement

சிவகாசி : ''நம்நாட்டில் பட்டாசு தொழிலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது'' என மாணிக்கம் தாகூர் எம்.பி., தெரிவித்தார்.சிவகாசியில் அவர் கூறியதாவது: அணை பாதுகாப்பு மசோதாவிற்கு என்றுமே காங்., ஆதரவளிக்காது. காங்., எதிர்த்து ஓட்டளிக்கும். அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழகம் காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வஞ்சிக்கப்படும். எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கக் கூடாது.தேசிய கல்விக் கொள்கை குறித்து ஜூலை 31 ல் லோக்சபாவில் நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் காங்., எம்.பி.,க்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். புதிய தேசிய கல்விக் கொள்கை கிரமப்புற மாணவர்களின் சமமான கல்வியை தடை செய்யும். காங்., ஆட்சியில் பட்டாசு தொழிலுக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்பட்டதில்லை. ஆனால் பா.ஜ., ஆட்சியில் தொடர் நெருக்கடியை பட்டாசு தொழில் சந்தித்து வருகிறது. பட்டாசு தொழிலை பாதுகாக்க காங்., குரல் கொடுக்கும்.இவ்வாறு கூறினார். கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ராஜா சொக்கர், இளைஞர் காங்., தலைவர் மீனாட்சிசுந்தரம் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X