நிலவில் மனிதன் காலடி; பொன்விழா கொண்டாட்டம்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி: நிலவில் மனிதனின் காலடி பதித்த, 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.






அப்பல்லோ 11 விண்கலத்தின் மூலம் நிலவில் முதலில் காலடி பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது உடன் சென்ற புஸ் ஆல்டிரின் , மைக்கேல் கொலின்ஸ்ஸின் பயணம் அறிவியல் விண்வெளி வரலாற்றில் முக்கியமானது. நிலாவில் மனிதன் காலடி வைத்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை நாசா சிறப்பாக கொண்டாடுகிறது.







Advertisement


1969 ம் ஆண்டு ஜூலை 20 ல் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து மனிதர்களுடன் புறப்பட்ட அப்பல்லோ 11 விண்கலம், நிலவை சென்றடைந்தது. நிலவில் மனிதன் வாழ சில ஆராய்ச்சிகளை நாசா மேற்கொண்டது.








நிலவில் 50 ஆண்டுகளுக்கு முன்னும் வீரர்கள் செல்வதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை நாசா செய்தது. டிஜிட்டல் இமேஜ் பிராசசிங் மூலம் நிலவின் புறப்பறப்பினை ஆய்வு செய்து புகைப்படங்களை எடுத்தது.








நிலவில் வெறும் காலால் நடக்கமுடியாது என்பதால் விண்வெளி வீரர்களுக்கு நாசா, தடகள வீரர்கள் பயன்படுத்துவது போன்ற ஷூக்களையே வழங்கியது. இதன் மூலம் முதலில் பதித்த காலடி தடங்களின் புகைப்படங்களை எடுத்து அதனையே ஆராய்ச்சியின் வெற்றியாக கருதுகிறது.








நிலவில் லூனார் கலத்தின் மூலம் நீல் ஆம்ஸ்டிராங்கின் குழுவினர் காற்றின் வேகம், புவியின் தொலைவு மற்றும் சில முக்கிய ஆராய்ச்சிகளை செய்தனர். நிலவில் முதலாக நடப்பட்ட கொடி என்ற பெருமையை அமெரிக்கா தட்டிச் சென்றது. நிலவில் முதலாக காலடி வைத்த பெருமை, நீல் ஆம்ஸ்டிராங்குக்கு கிடைத்துள்ளது. நிலவில் ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு, உலகம் முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - london,யுனைடெட் கிங்டம்
22-ஜூலை-201911:22:23 IST Report Abuse
sankar அம்மம்ம்ம்ப்பெரியா... அப்பா டக்கரான அமெரிக்க ... இன்று ரஷ்யாவின் "ராக்கெட்" தொழிநுட்பத்தை நம்பி இருப்பது ஏன்... ??.. மேலும் தங்கள் ரஷ்ய ராக்கெட் தொழில் நுட்பத்தைவிட ..... 10 வருடங்கள் ( ஒரு தலைமுறை ) பின்தங்கியுள்ளதாக சொல்லவேண்டும்?? நாட்டாண்மையின் பொய்கள் உண்மைகளாகிவிடும் ????
Rate this:
Share this comment
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
22-ஜூலை-201910:56:43 IST Report Abuse
sankar ஒரு பொய்யாய் நிஜமாக்க திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தால் அது நிஜமாகிவிடும் .... ஆம் இன்னும் பல கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்கும் நாஸா /// அதையே உண்மையாக்க முயற்சிக்கிறது .... நிலவில் குதித்து குதித்து நடந்த ???? வீரர்கள் ( காற்று மாறும் ஈர்ப்பு விசை குறைவாம் ) ... அமெரிக்க கொடி பறக்கும் ?? திசை ?? .... வீரர்களின் நிழல் .... நன்கு திசையில் இருப்பது .... மேலும் அவரச அவசரமாக நிலவுக்கு சென்ற அமெரிக்க திரும்ப செல்லாதது ஏன்.... சந்திராயன் தனது ஆராய்ச்சியில் நிலவில் உறைந்த நிலையில் நீர் இருப்பதை நிரூபணம் செய்துள்ளது .... காற்று இல்லாத சூழ்நிலையில் நீர் சாத்தியம் இல்லை ... இறங்கிய வீரர்கள் திரும்பியது எப்படி ????..... போங்கப்பா ... முடியல்ல ....
Rate this:
Share this comment
Cancel
Ramasamy - Chennai,இந்தியா
22-ஜூலை-201908:48:35 IST Report Abuse
Ramasamy நிலவை காட்டி சோறு ஊட்டிய போது வாழ்க்கையும் நன்றாக இருந்தது. உலகமும் நன்றாக இருந்தது. நிலவுக்கே சென்று சோறு ஊட்டவேன்றுமென்று நினைப்பது உலகுக்கும் நல்லதல்ல பாவம் அந்த நிலவுக்கும் நல்லதல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X