பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறும் வாகன ஓட்டிகள் இனி தப்ப முடியாது; போலீஸ் கையில் 'இ-செல்லான்' சிஸ்டம்

Added : ஜூலை 22, 2019
Share
Advertisement

விருதுநகர் : விருதுநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு 'இ செல்லான்' முறையில் இனி அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு மின்னணு முறையில் அபராதம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான 'இ செல்லான்' மெஷின்கள் வந்துள்ளன. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, பொது இடங்களில் அச்சுறுத்தும் வேகத்தில் செல்வது, உரிய ஆவணங்கள் இன்றி ரோட்டில் பயணிப்பது ஆகியவை போக்குவரத்து விதிமீறல்களாகும். போலீசார் ரோந்து பணியின் போது விதியை மீறி வாகனம் ஓட்டுவோர் பிடிபட்டால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். அவ்வாறு பிடிபட்டவர்களுக்கு போலீசார் அபராதத்தை பெற்று அதற்கான ரசீதை கைப்பட எழுதி கொடுப்பர். தற்போது இந்த அபராதம் வசூலித்து ரசீது வழங்கும் முறை மின்னணு மயமாகி உள்ளது. மாவட்ட காவல்துறைக்கு 30 'இ செல்லான்' மெஷின்கள் வந்துள்ளன. இவை ஸ்மார்ட் போன் மாதிரி 'டச்' தொடுதிரை கொண்டவை. ஏ.டி.எம்.,கார்டை தேய்த்தும் பணம் செலுத்தி கொள்ளலாம். இதில் வாகனத்தின் பதிவு எண்ணை டைப் செய்தால் ஆர்.சி.,புத்தகத்திலுள்ள புகைப்படத்துடன் பெயர், முகவரி ஆகிய விவரங்கள் வந்துவிடும். இதன் மூலம் திருட்டு வாகனமா, இல்லையா என்பதை கண்டறிந்து விடலாம். மெஷினில் விதிமீறலை குறிப்பிட்டால் அதற்கான தொகை 'பில்லிங்' முறையில் வந்துவிடும். பின் ஏ.டி.எம்., கார்டு மூலம் தேய்த்து அபராதம் செலுத்தி கொள்ளலாம். இதற்கான ரசீது மெஷினிலே பிரிண்ட் ஆகி வருகிறது. 'பேடிஎம்', 'போன்பே' போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை முறையிலும் செலுத்த இயலும் என்பது கூடுதல் சிறப்பு. போலீஸ் இன்ஸ்பெக்டர் 10 பேருக்கும், மீதமுள்ளவை டிராபிக் போலீசாருக்கும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக எஸ்.பி.,ராஜராஜன் கூறுகையில், "ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுடன் மெஷினில் காட்டப்படும் தரவுகள் ஒத்துப்போகிறதா என சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே ஆகஸ்ட் முதல் வாரத்தில் 'இ செல்லான்' மெஷின்கள் செயல்பாட்டுக்கு வரும்." என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X