சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளிக்கு கத்திவெட்டு: 2 வாலிபர்கள் கைது

Added : ஜூலை 22, 2019
Share
Advertisement

செய்யாறு: செய்யாறு அருகே, முன்விரோத தகராறில் தொழிலாளியை கத்தியால் வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெள்ளை கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், 33. கூலி தொழிலாளி; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில், 32, என்பவருக்கும், முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த, 19ல், ராமலிங்கம், தனது உறவினர் தர்மலிங்கத்துடன் பைக்கில் சென்றார். அப்போது வெள்ளைக்கூட்ரோடு அருகே பின்னால் மற்றொரு பைக்கில் வந்த செந்தில் மற்றும் அவரது நண்பர் கிரிதரன், 32, ஆகியோர் ராமலிங்கத்தை வழி மறித்து கத்தியால் சரமாரி வெட்டினர். இதை தடுத்த, தர்மலிங்கத்தையும், கைகளால் தாக்கினர். இதில், படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அனக்காவூர் போலீசார் விசாரித்து, செந்தில், 32, கிரிதரன், 32, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X