டில்லியில் வெளிநாடு வாழ் இந்தியர் மர்ம மரணம்| Dinamalar

டில்லியில் வெளிநாடு வாழ் இந்தியர் மர்ம மரணம்

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (2)
Share
டில்லி, தாஜ், ஓட்டல், என்ஆர்ஐ, மரணம்

புதுடில்லி: டில்லி தாஜ் ஓட்டலில் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் மர்ம முறையில் இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 35 வயது மதிக்கத்தக்க அவர் முன்னிஜெட்லி என தெரிய வந்துள்ளது. இவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வந்தார். வர்த்தக ரீதியாக டில்லி வந்த அவர் தாஜ் ஓட்டலில் தங்கி உள்ளார். இந்நிலையில் அவரது அறையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது தந்தைக்கு போன் செய்த போது அதில் எவ்வித ரெஸ்பான்சும் இல்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X