பொது செய்தி

இந்தியா

"கொள்ளை அடித்தவர்களை கொல்லு" பயங்கரவாதிகளுக்கு கவர்னர் அதிரடி

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (40)
Advertisement

ஜம்மு: காஷ்மீரை கொள்ளை அடித்த லஞ்சப்பேர்வழிகளை கொலை செய்யுங்கள் என மாநில கவர்னர் சத்யபால் மாலிக் , பயங்கரவாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.






கார்கிலில் நடந்த சுற்றுலா விழாவை துவக்கி வைத்து கவர்னர் மாலிக் மேலும் பேசுகையில்; லஞ்சம் தான் நாட்டின் பெரும் நோயாக உள்ளது. இந்த நாட்டில் அப்பாவி மக்களையும், ராணுவ வீரர்களையும் ஏன் துப்பாக்கி ஏந்தி பயங்கரவாதிகள் கொல்ல வேண்டும் ? இதற்கு பதில் இந்ந காஷ்மீர் வளங்களை கொள்ளை அடித்த லஞ்ச பேர்வழிகளை கொல்ல வேண்டியது தானே ! இது வரை யாரையாவது இப்படி செய்திருக்கிறீர்களா ?


விடுதலை புலிகள் நிலை என்னாச்சு ?


துப்பாக்கியால் இந்த அரசை பணிய வைக்க வேண்டும் என பயங்கரவாதிகள் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது. அவர்கள் தோல்வியை தான் தழுவுவார்கள். துப்பாக்கியால் இளைஞர்கள் தங்களின் வாழ்வை இழக்க வேண்டாம்.





உலகிலேயே பெரிய சக்தி வாய்ந்த இயக்கமாக கருதப்பட்ட விடுதலை புலிகள் இப்போது எங்கே இருக்கிறார்கள். தற்போது வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயங்கரவாதிகள் 250 பேரை கொல்ல திட்டமிட்டுள்ளோம். இது விரைவில் நிறைவேறும் இவ்வாறு கவர்னர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஜூலை-201917:37:13 IST Report Abuse
J.V. Iyer தேச பக்தியில் உணர்ச்சியுடன் பேசி இருக்கிறார். இவர் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது. மன்னிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஜூலை-201915:36:46 IST Report Abuse
Nallavan Nallavan செய்துவிட்டு இவர் மீது பழி போட்டுவிடுவார்கள் ......
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
22-ஜூலை-201915:11:02 IST Report Abuse
southindian சார் எங்க ஊருக்கு வரச்சொல்லுங்க உடனடியாக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X