சுயேட்சை எம்எல்ஏக்கள் மனு ; சுப்ரீம்கோர்ட் மறுப்பு

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement
சுயேட்சைகள், கர்நாடகா, ஓட்டெடுப்பு

புதுடில்லி : கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே (ஜூலை 22) ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடவேண்டும் என்று அம்மாநில சுயேட்சை எம்எல்ஏக்கள் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை இன்றே விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சுப்ரீம்கோர்ட் மறுத்துவிட்டது.

கர்நாடக சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் நேற்று இரவு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில் ஜூலை 22 மாலை 5 மணிக்குள், கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்கள் சார்பில் இன்று சுப்ரீம்கோர்ட்டில் ஆஜரான முகுல்ரோகித்ஹி இந்த வழக்கை இன்றே அவசரமாக விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணியளவில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
22-ஜூலை-201914:38:15 IST Report Abuse
narayanan iyer தயவு செய்து சுதந்திர நாடு என்று சொல்லாதீர்கள் .
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
22-ஜூலை-201912:01:00 IST Report Abuse
Subburamu Krishnaswamy நீதிபதிகளும் மனிதர்கள்தானே. அவர்களும் கர்நாடகா நாடாகத்தை ரசிக்க வேண்டாமா ? சுதந்திர நாட்டில் அரசியல் கோமாளித்தனத்துக்கு அளவில்லாமல் போகிறது.
Rate this:
Share this comment
Cancel
KSV. PATHY - erode,இந்தியா
22-ஜூலை-201911:55:54 IST Report Abuse
KSV. PATHY ... "சுப்ரிம் கோர்ட் இன்றே விசாரிக்க மறுப்பு" என்றல்லவா இருந்திருக்க வேண்டும் ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X