அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (25)
Advertisement

பெங்களூரு ; தங்களது பதவிகளை ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் நாளை(ஜூலை 23) காலை 11 மணியளவில் தனது முன்னாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளார்.







15 பேர் அதிருப்தி


கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 15 பேர், முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி தெரிவித்து தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அவர்கள் தற்போது மும்பையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் தவிர அரசுக்கு ஆதரவளித்து வந்த 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டனர்.





நம்பிக்கை தீர்மானம்
இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று முதல்வர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார். அதன்மீது இன்றும் விவாதம் தொடர்ந்து நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






சபாநாயகர் சம்மன் :


இன்று மாலையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சபாநாயகர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பி இருப்பது கர்நாடக அரசியலில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-ஜூலை-201903:44:55 IST Report Abuse
meenakshisundaram சபாநாயகர் தனது வேலையை அதிகமாகவே செய்கிறார்ஆளும் கட்சிக்கு சாதகமாக எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்து முடித்து விட்டார் .கடைசியா இவர் கர்நாடக சட்ட சபையினை மும்பைக்கே இடம் மாற்றி வாக்கெடுக்கலாம் ஆளுநரை பற்றி சட்டசபையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அத்து மீறிய வை.அதை கண்டிக்காமலேயே தான் பாரபட்சமற்ற நிலையிலேயே உள்ளேன் என்று தனக்குத்தானே அடிக்கடி சொல்லிக்கொண்ட இவரை என்னென்பது?
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-201902:41:34 IST Report Abuse
Balakrishnan Gurumurti பிஜேபி பிரதிநிதிகள் யாவரும் ஒரு fake யோகிகள் - நம்பிக்கை வைக்கமுடுயாது என் கருத்து.
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201923:36:59 IST Report Abuse
Balakrishnan Gurumurti பிஜேபி தவறான வழிகளில் செல்லுகிறது என்பதே திண்ணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X