அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்| Dinamalar

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (25)
Share

பெங்களூரு ; தங்களது பதவிகளை ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் நாளை(ஜூலை 23) காலை 11 மணியளவில் தனது முன்னாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளார்.



latest tamil news




15 பேர் அதிருப்தி


கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 15 பேர், முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி தெரிவித்து தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அவர்கள் தற்போது மும்பையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் தவிர அரசுக்கு ஆதரவளித்து வந்த 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டனர்.


latest tamil news



நம்பிக்கை தீர்மானம்
இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று முதல்வர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார். அதன்மீது இன்றும் விவாதம் தொடர்ந்து நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news




சபாநாயகர் சம்மன் :


இன்று மாலையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சபாநாயகர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பி இருப்பது கர்நாடக அரசியலில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X