காங்., 24 மணி நேரத்தில் உடையும்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (64)
Advertisement

புதுடில்லி : சோனியா குடும்பத்தை சேராத ஒருவரை கட்சியின் தலைவராக்கினால் காங்., 24 மணி நேரத்தில் உடையும் என கட்சியின் மூத்த தலைவரான நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.





கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்த பிறகு, பிரியங்காவை தலைவராக்க வேண்டும் என கட்சிக்குள் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் சோனியா குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என ராகுல் ஏற்கனவே கூறி விட்டதால், புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சிக்குள் இழுபறி இருந்து வருகிறது.

இந்நிலையில், சோனியா குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக தேர்வு செய்வது குறித்து நட்வர் சிங் கூறுகையில், ராகுல் இல்லை என்றால் பிரியங்காவை கட்சியின் தலைவராக்க வேண்டும். சோனியா குடும்பத்தை சேராத ஒருவர் தலைவரானால் கட்சி 24 மணி நேரத்திற்குள் உடையும். சொன்பத்ரா விவகாரத்தில் பிரியங்காவின் செயல்பாடு துணிச்சலானது. சோனியா குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக்க வேண்டும் என்ற முடிவை ராகுல் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.




முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி கூறுகையில், ராகுல் இல்லாத பட்சத்தில் பிரியங்காவை தவிர வேறு வந்தாலும் கட்சி தலைவராக 100 சதவீதம் ஏற்க முடியாது. அப்படியே நியமிக்கப்பட்டால், அவரை பிடிக்காத ஒரு பிரிவினரும், அவரை சார்ந்தவர்களும் கட்சியில் இருந்து விலகுவர் என்றார்.




இதற்கிடையில் புனேவை சேர்ந்த இன்ஜினியரான ரமேஷ் பக்வி (28) என்பவர் காங்.,ஐ வளப்படுத்த கட்சியின் புதிய தலைவராக தான் தயாராக இருப்பதாக கட்சி மேலிடத்திற்கு கடிதம் அளித்துள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி குழப்பத்தில் இருப்பதால், அதனை சரிசெய்ய தான் தலைவர் பதவிக்கு வேட்புமனு அளிக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
28-ஜூலை-201915:18:52 IST Report Abuse
bal தோத்து போயாச்சு...இன்னும் செய்திகளில் தினமும் இருக்க வேண்டும் என்பதற்காக...எப்படியெல்லாம் நாடகமாடுகிறது காங்கிரஸ் கட்சி.
Rate this:
Share this comment
Cancel
Charles - Burnaby,கனடா
26-ஜூலை-201920:56:44 IST Report Abuse
Charles காங்கிரஸ் கட்சி சீரமைக்க மக்கள் உதவ வேண்டும். காங்கிரஸ் தான் ஒரு தேசிய எதிர்கட்சியாய் செயல்பட முடியும். ஒரு நல்ல தலைவர் கிடைக்கும் வரையில் ஏன் பிரியங்கா காந்தி கட்சியை காப்பாற்றி கொடுக்க முடியாது? நேரு குடும்பத்தால் சிறந்ததும் கெட்டதும் காங்கிரஸ் தான் அதனால் கட்சியை பொறுப்பானவர்களிடம் ஒப்படைப்பது அவர்கள் கடமை.
Rate this:
Share this comment
Cancel
K. Sridharan - Chennai,இந்தியா
26-ஜூலை-201916:47:56 IST Report Abuse
K. Sridharan வேண்டும் என்றால் நான் தலைவராக வரட்டுமா. எப்படியும் காண் கிராஸ் அழியப்போகிறது. என்னால் முடிந்த நல்ல காரியம் செய்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X