இந்தியாவுக்கான புதிய சீன தூதர்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சன் வெய் டாங் பொறுப்பை ஏற்றுக்கொள்ள டில்லி வந்துள்ளார்.சன் வெய் டாங் :சீனாவின் முன்னாள் தூதர் லூ ஜாவோ ஹூய், சீன வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து தமது தூதரக பதவியை ராஜினாமா செய்து அவர் சீனா சென்று விட்டார். இதனையடுத்து தெற்காசியா குறித்த விரிவான

புதுடில்லி : இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சன் வெய் டாங் பொறுப்பை ஏற்றுக்கொள்ள டில்லி வந்துள்ளார்.



latest tamil news




சன் வெய் டாங் :


சீனாவின் முன்னாள் தூதர் லூ ஜாவோ ஹூய், சீன வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து தமது தூதரக பதவியை ராஜினாமா செய்து அவர் சீனா சென்று விட்டார். இதனையடுத்து தெற்காசியா குறித்த விரிவான அனுபவமும் அறிவும் மிக்கவரான 53 வயதான சன் வெய் டாங் புதிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news




வலிமையான தலைவர்கள் :


அவர் இந்தியா வரும் முன்னர், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்திய செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், '' இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேம்பட பாடுபடுவேன். ஆசியாவின் இருபெரும் சக்திகளான இந்தியாவிலும் சீனாவிலும் ஆட்சிப்பொறுப்பில் வலிமையான தலைவர்கள் இருப்பதால் இருநாட்டு உறவுகளும் புதிய உச்சத்தை அடையும்,'' என்றார்.


latest tamil news




மோடி - சீஜின்பிங் சந்திப்பு :


இதனிடையே மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்டில் சீனப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அக்டோபர் மாதத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்க உள்ள நிலையில், இருநாட்டு உறவுகளையும் இணக்கமாக வைத்திருக்க இருநாட்டு அதிகாரிகளும் அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-201916:21:11 IST Report Abuse
நக்கல் பேரும் ஒரே மாதிரி இருக்கு, பார்க்கவும் ஒரே மாதிரி இருக்காங்க... பேசுவதும், கொள்கையும் கூட மாறாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X