கழிவறையை சுத்தம் செய்யவா எம்.பி., ஆனேன்?| Dinamalar

கழிவறையை சுத்தம் செய்யவா எம்.பி., ஆனேன்?

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (52)
Share

போபால் : தொகுதியின் தூய்மைப் பணிகள் குறித்த பேசிய பா.ஜ., எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், கழிவறையை சுத்தம் செய்யவா நான் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என கூறி உள்ளார்.



latest tamil news


சமீபத்தில் பா.ஜ., தொண்டர் ஒருவர், போபால் தொகுதிக்கு உட்பட்ட தனது பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என பிரக்யா தாக்கூரிடம் புகார் கூறி உள்ளார். இது பற்றி செஹோர் பகுதியில் பா.ஜ., தொண்டர்களிடையே பேசிய அவர், உங்களது கழிப்பறையை சுத்தம் செய்ய நான் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேனோ, அதை சரியாக செய்வேன்.


latest tamil news



ஒரு எம்.பி.,யாக உள்ளூர் பிரதிநிதிகளான எம்எல்ஏ., கவுன்சிலர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து தொகுதி மேம்நாட்டு பணிகளை செய்வேன். மற்றபடி உங்களுக்கு இருக்கும் குறைகளை உங்கள் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை வைத்துத் தீர்த்து கொள்ளவும். என்னை அடிக்கடி போனில் அழைத்து புகார் கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றார்.


latest tamil news


இவர் இது போன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என பேசிய பரபரப்பை கிளப்பினார். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X