பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனம் ; ஏற்பாடுகள் தீவிரம்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

காஞ்சிபுரம் : அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.latest tamil newsஓய்வறைகள் :

இன்று(ஜூலை 22) காஞ்சிபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், '' 22வது நாளாக அத்திவரதர் தரிசனத்திற்கு பக்தர்கள் அதிக அளவில் வந்துள்ளனர். அவர்களுக்கு ஓய்வறை வசதிகள், போதுமான கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


latest tamil news3 இடங்களில் அன்னதானம்

அதேபோல, மேற்கு கோபுரம் அருகில் 3 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 16 கால் மண்டபத்தின் அருகில் பக்தர்களுக்கு தயிர்,பிஸ்கட், வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மருத்துவ குழுக்கள் :

அதேபோல கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குப்பைகளை அள்ளி 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கான வசதிகளை மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர், '' என்றார்.


latest tamil newsஜீயர் கோரிக்கை :

அத்திவரதரை மீண்டும் பூமிக்குள் வைக்ககூடாது என்று ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் விடுத்துள்ள கோரிக்கை பற்றி கேள்வி எழுப்பியபோது, '' அது குறித்து தமிழக முதல்வர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறையினர் ஆகம விதிகளை கணக்கில் கொண்டு முடிவெடுப்பர்,'' என்றார்.


குவிந்த பக்தர்கள் :

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 22வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள், இன்று கொட்டும் மழையிலும் குவிந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
23-ஜூலை-201915:17:15 IST Report Abuse
DSM .S/o PLM ஒரே ஒரு கண்டிஷன் போடுங்கள் . (இந்து ) கடவுள் மறுப்பை தனது கட்சி சித்தாந்தங்களின் அடிப்படையாக கொண்டுள்ள எந்த கட்சிக்காரரும் அத்தி வரதரை தரிசிக்க வரக்கூடாது என்று.. கூட்டம் குறைந்து விடும்.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22-ஜூலை-201921:42:52 IST Report Abuse
Swaminathan Chandramouli உத்திர பிரதேசத்தில் சமீபத்தில் கும்பமேளா என்று ஒரு மிக பெரிய விழாவை நடத்தினார்கள் . ஒரு கோடி பக்தர்கள் பங்கு பெற்று தரிசனம் செய்தனர் மாநில அரசாங்கம் மிக அருமையாக ஏற்பாடுகள் செய்து ஒரு அசம்பாவிதம் இல்லாமல் நிறைவு பெற்றது
Rate this:
Cancel
Iraivi -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-201917:48:29 IST Report Abuse
Iraivi TODAY I VISITED KANCHIPURAM FOR ATHI VARADHAR DHARSHAN. ARRANGEMENTS WERE VERY VERY POOR. WHILE HUNDREDS OF POLICEMEN WERE STANDING, THERE IS NO REGULATION. PEOPLE ARE SQUEEZING THEMSELVES AND IT LOOKS LIKE FIRST DAY FIRST SHOW TICKET BOOKING.VIP PASS AREA IS STILL WORSE. EACH GUY RELATED TO TEMPLE OR CURRENT ADMINISTRATION ARE BRINGING A HUGE CROWD KNOWN TO THE FOR DHARSHAN. SORRY STATE OF AFFAIRS. WHILE UP ADMINISTRATION HANDLED CRORES OF PEOPLE AT ALLAHABAD KUMBHMELA EVEN WITHOUT SN INCIDENT, OUR GREAT ADMINISTRATORS, POLITICIANS AND POLICE WERE UNABLE TO REGULATE EVEN 1 LAC PEOPLE PER DAY.SORRY STATE OF AFFAIRS.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X