சினி உலகின் குட்டிய நயன்தாரா : ஆனந்தத்தில் அனுஸ்ரீ

Added : ஜூலை 22, 2019
Advertisement
சினி உலகின் குட்டிய நயன்தாரா : ஆனந்தத்தில் அனுஸ்ரீ

சினி உலகின் குட்டி நயன்தாரா குழந்தை நட்சத்திரம் அனுஸ்ரீ. அனு என்றால் அழகானவள் என அர்த்தம். பெயருக்கு ஏற்ப நடிப்பில் அனுபவமாக அழகால் மெருகூட்டி சாதித்து வருகிறார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக கொஞ்சும் தமிழில் அவருடன் உரையாடியதாவது...

சொந்த ஊர் கேரளா மாநிலம் ஷொர்னுார். தந்தை ரமேஷ் சிறுவயதில் சென்னைக்கு வந்து விட்டார். தாய் மொழி மலையாளம் என்றாலும் கூட அதிகம் பேசுவது தமிழ் தான். சிறுவயதில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம். சினிமாவில் நடிகர்கள் நடிப்பதை பெற்றோர், நண்பர்களிடம் நடித்து காட்ட அதுவே பேஷனாகி விட்டது.

தற்போது சென்னை பெரம்பூர் அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கிறேன். 11 வயதிலிருந்தே நடித்து வருகிறேன். தமிழில் சாமி 2, சந்திரமவுலி, வண்ணக்கிளி பாரதி உட்பட 39 படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாள படங்களிலும் நடித்திருக்கிறேன்.

தற்போது சீரியல்களிலும் நடிக்கிறேன். நடிப்பதால் கல்விக்கு எந்த பாதிப்பும் இல்லை. வண்ணக்கிளி பாரதி படத்தில் கதாநாயகி மனிஷாஜித்தின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தேன். படத்தில் மண்ணிற்குள் புதைந்து விடும் காட்சியில், என்னையே நான் வியக்கும் அளவிற்கு 'டூப்' போடாமல் நடித்தது மகிழ்ச்சியளித்தது. என் நடிப்பை கண்டு இயக்குனர் வெங்கடேசன், நடிகர்கள் லட்சுமணன், கஞ்சா கருப்பு பாராட்டினர்.

துறுதுறுவென துடிப்பாக பேசுவதால் நடிகர்கள் என்னை 'குட்டி நயன்தாரா' என்பது பெருமையளிக்கிறது. என் லட்சியமும் திரைத்துறையில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா போல உயர வேண்டும் என்பது தான். நடித்ததில் மிகவும் பிடித்தது அறுவம் படம். இதில் எனக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. அதை முழுமையாக செய்து முடித்த பிறகு தான் திருப்தி ஏற்பட்டது. எந்தவொரு கதாபாத்திரத்தையும் முழு மனதுடன் இறுதி வரை செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு நடிக்கிறேன் என்றார்.இவரை வாழ்த்த rameshbhpc@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X