அக்னியிலும் அஸ்தமனமாகும் நிலா... மையிட்டதால் நம் மதியையும், நிம்மதியையும் மயக்கும் கண்கள்... பொய்யினால் புதிர்போடும் முத்து தானோ பற்கள்... எந்நேரமும் தேன் ஈரம் காயாத உதடுகள்... உறைபனிக்கும் காய்ச்சல் வரும் தேகம்...
பூக்களே வியந்து ரசிக்கும் பேரழகி... இளைஞர்களின் 'மந்திரி', மும்பை 'முந்திரி' நடிகை ஷிரின் காஞ்வாலா. தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்ததாவது...
* 'ஷிரின்' யார்
கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும். 'அட்ஜஸ்ட்' பண்ணிக்குங்க. மும்பை பொண்ணு. படிப்பை முடித்து வானத்தில் பறந்து பறந்து அதாங்க விமான பணிப் பெண்ணாக பணிபுரிந்தேன். நேரம் கிடைக்கும் போது 'மாடலிங்' செய்வேன்.
* சினிமா
விளம்பர படங்களில் நடித்த அனுபவம் சினிமா வாய்ப்பை பெற்று தந்தது. சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது. முதல் படம் தெலுங்கில் தேச திம்மாரி. தமிழ் சினிமாவில் தடம் பதிக்க நான் பணிபுரிந்த விமானத்தில் மும்பை டூ சென்னை வந்தேன்.
* முதல் வாய்ப்பு
சென்னை வந்ததும் தமிழில் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் அழைத்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனேன். படத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு. தற்போது சிபி ராஜூடன் 'வால்டர்' படத்தில் நடிக்கிறேன். தமிழ் ரசிகர்கள் மனதில் எனக்கென இடம் கிடைக்கும்.
* நிருபராக நடித்தது
விமான பணிப்பெண் பணி என்பது சுலபமில்லை. பயணிகளிடம் முகம் சுளிக்காமல் நடக்க வேண்டும். நிருபர் பணியும் சாதாரணமானதில்லை. 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' படத்தில் 'டிவி' செய்தியாளராக நடித்தேன். நிஜத்தை போல் பிரேக்கிங் செய்திக்காக சிரமப்பட்டு போனோம். நிருபராக நடித்ததில் பெருமைதாங்க.
* கிளாமர்
கதையை பொருத்தது. யார் மனதையும் புண்படுத்தாத வகையில் கிளாமர் இருந்தால் ஓ.கே., மக்கள் நல்ல கதையை தான் தேடுகின்றனர். கிளாமரை இல்லை.
* பொழுபோக்கு
புத்தகங்கள் அதிகம் படிப்பேன். டிராவலிங் பிடிக்கும். வீட்டில் இருந்தால் சமையல். சிக்கனில் அத்தனை 'ரெசிபி'யும் அத்துப்படி. தோசை பிரியர் நான். சென்னையில் வெரைட்டியாக தோசை ஆர்டர் செய்து சாப்பிடுவேன்.
* லட்சியம்
சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு எனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும். எதை வேணாலும் விடலாம். லட்சியத்தை மட்டும் விட்டுடாதீங்க.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE