மலைகளில் மழை ; சமவெளியில் சாரல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலைகளில் மழை ; சமவெளியில் சாரல்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (2)
Share

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



அம்மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில்,'' கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் தமிழகத்தில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். அதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலுார் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.


latest tamil news


கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ., மழையும், தாம்பரத்தில் 5 செ.மீ., மழையும், வால்பாறை மற்றும் சின்னகல்லாறில் 4 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு 40 கி.மீ., முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்யக்கூடும்.


latest tamil news



தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, கடந்த 1 ம் தேதி முதல் 22 ம் தேதி வரையிலான காலத்தில் மொத்தமாக 7.செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விடவும் 30 சதவீதம் குறைவானதாகும், '' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X