கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் திறனறிய ஆய்வுக்குழு : ஐகோர்ட் அதிரடி

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (18)
Advertisement

சென்னை ; தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் கற்றுத்தரும் திறனை அறியவும், மாணவர்களின் கற்கும் திறனை அறியவும் ஆய்வுக்குழுக்களை அமைக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.







சவுபாக்கியவதி :


புதுக்கோட்டையை சேர்ந்த சவுபாக்கியவதி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையில், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


கற்றல், கற்பித்தல் திறன் :


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், மாவட்ட முதன்மை கல்வி அலவலர்கள் தலைமையில் பல்வேறு சிறப்பு குழுக்களை அமைத்து ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், மாணவர்களின் கற்றல் திறனை அறிந்திட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






ஆசிரியர்கள் மீது நடவடிக்கை :


இந்த ஆய்வுகளை அரசும், பள்ளிக்கல்வித்துறையும் அடிக்கடி மேற்கொள்ள ண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். மேலும், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் அந்த உத்தரவில் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






கணிதத்திறன் மேம்பாடு :


அதேபோல, நிபுணர் குழுக்களின் ஆலோசனைகளில் பேரில், கல்விக்கொள்கையின் அடிப்படையில், தொடக்க கல்வியில் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் மேம்பட மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டு மதுரை ஐகோர்ட் இந்த வழக்கை முடித்து வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Marappan - erode,இந்தியா
23-ஜூலை-201910:34:49 IST Report Abuse
Subramanian Marappan 1960களில் அரசு பள்ளியில்தான் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் குழந்தைகள் படித்தனர்.அப்போது 1ம் வகுப்பிலிருந்து பரீட்சை இருந்தது.பாஸ் பண்ணினால்தான் அடுத்த வகுப்பிற்கு போக முடியும். நான் 6ம் வகுப்பில் சேர்ந்தபோது அங்கு 2 ஆண்டு பெயிலாகி 3ம் ஆண்டும் படித்த மாணவர்கள் நான்கைந்து பேர் இருந்தார்கள். எங்களுக்கு 8ம் வகுப்பில்தான் ஆங்கில present tense, past tense, past participle சொல்லி கொடுக்கப்பட்டது.இப்ப மாதிரி ஆல் பாஸ் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
22-ஜூலை-201921:42:00 IST Report Abuse
JSS திராவிட இயக்கங்களுக்கு திறன் திறமை எல்லாம் ஊழலில்தான். மற்ற எதிலும் திறமையென்பது எள்ளளவும் இருக்கக்கூடாது. ஹிகோட் கூறியது வரவேற்க தக்கது. திராவிட இயக்கங்கள் மக்களை ஏமாற்றுவதில் திறமை கொண்டவை அதனாலதான் இதுகாறும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்கு பதிலாக திறமை இல்லாத ஆசிரியர்களை அமர்த்தி கல்வியையே குட்டிச்சுவர் ஆக்கியது.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
22-ஜூலை-201920:51:29 IST Report Abuse
அம்பி ஐயர் திறனறியும் குழுவுக்கு அடிச்சது யோகம்.... நல்லா குளிப்பாட்டுவாங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X