பொது செய்தி

இந்தியா

பூட்டான் செல்கிறார் மோடி

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : பார்லி., கூட்டத்தொடர் முடிந்ததும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பிரதமர் மோடி பூட்டான் செல்ல உள்ளார். காலம் காலமாக இந்திய பிரதமர்கள் அனைவரும் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக பூட்டானுக்கு தான் சென்றுள்ளனர். ஆனால் இதனை மாற்றி, 2வது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பீஜிங் செல்ல உள்ளார். அங்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யாயை சந்தித்து, சீனாவில் நடக்கும் மாநாட்டின் போது பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு பற்றி பேச உள்ளார். இந்தியா- சீனா இடையே நட்புறவு ஏற்பட்டு அடுத்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை விழாவாக கொண்டாட இரு நாடுகளும் முடிவு செய்துள்ளனர். இந்த விழாவை முன்னிட்டு 70 நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்தும் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X