பொது செய்தி

இந்தியா

ஏடிஎம் மோசடி : 3வது இடத்தில் தமிழகம்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement

புதுடில்லி : நாட்டிலேயே டில்லியை விட மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் தான் ஏடிஎம் மோசடிகளில் அதிக அளவிலான தொகையை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏடிஎம் மோசடிகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டும் தமிழகம் 3வது இடத்திலேயே இருந்தது.



latest tamil news


சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் படி, 2018 - 19 ம் நிதியாண்டில் அதிகபட்சமாக தலைநகர் டில்லியில் ஏடிஎம் மோசடி தொடர்பாக 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின்படி, ஏடிஎம் மோசடியில் நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 233 வழக்குகள் பதிவாகி உள்ளன. டில்லி, ஏறக்குறைய ரூ.2.9 கோடியை ஏடிஎம்., மோசடியில் இழந்துள்ளது.


latest tamil news



முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா ரூ.4.81 கோடியையும், 3வது இடத்தில் உள்ள தமிழகம் ரூ.3.63 கோடியையும் இழந்துள்ளன. ஏடிஎம் மோசடி நடந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெறாத மாநிலங்கள் அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா மட்டுமே. இந்த மாநிலங்களில் ஒரு ஏடிஎம் மோசடி கூட நடந்தது இல்லை.


latest tamil news



2017-18 ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2018-19 ம் நிதியாண்டில் ஏடிஎம் மோசடியால் இழந்த தொகையின் எண்ணிக்கை ரூ.21.4 கோடியாக குறைந்துள்ளது. 2017-18 ம் ஆண்டில் ஏடிஎம் மோசடியில் ரூ.65.3 கோடி பண இழப்பு நடந்துள்ளது. அதிகப்படியான ஏடிஎம் மோசடிகள், ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி, ஏடிஎம் கார்டு தகவல்களை காப்பி செய்வது நடக்கிறது என தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பாதுகாவலர்கள் இல்லாத ஏடிஎம்., மையங்களுக்கு வரும் ஏடிஎம் மிஷனை பயன்படுத்த தெரியாதவர்களை குறிவைத்து, ஏடிஎம்., கார்டுகளை மாற்றியும் மோசடிகள் நடக்கின்றன. போலி கால்சென்டர்கள் மூலம், வங்கி ஏஜெண்ட் என கூறி அவர்களின் வங்கி கணக்கு விபரங்களை பெற்றும் மோசடி செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஜூலை-201900:42:31 IST Report Abuse
J.V. Iyer சுடலை முதல்வரானால் இதில் முதல் இடம் பிடிப்போம். கவலை வேண்டாம். எல்லோரும் டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Jegan Nicholas - Tirunelveli,இந்தியா
22-ஜூலை-201922:17:42 IST Report Abuse
Jegan Nicholas திராவிடங்கள் இருக்கும் வரை திருட்டுக்கு குறைவிருக்காது
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22-ஜூலை-201921:22:57 IST Report Abuse
Swaminathan Chandramouli கவலைப்படவேண்டாம் கூடிய சீக்கிரத்தில் முதல் இடத்தை பிடிப்போம்
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
22-ஜூலை-201921:51:03 IST Report Abuse
தாண்டவக்கோன்அப்பாடி, பாஜ கூட்டம் ஆட்சிய புடிக்க சான்ஸே இல்ல👏👍...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X