அரசியல் செய்தி

தமிழ்நாடு

கரூரில் கதவணை கட்டத் திட்டம்: முதல்வர்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

சேலம் ; கரூரில் காவிரியாற்றின் குறுக்கே 1.25 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க கதவணை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.



latest tamil news



கோதாவரி - காவிரி இணைப்பு :


சேலத்தில் செ்தியாளர்களிடம் பேசுகையில், '' கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேறும். அது சாத்தியமானால் காவரி ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி இருபுறமும் 50 கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாயிகள் பயன் அடைவர்.


latest tamil news



கரூரில் கதவணை :

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தமிழக பொறியாளர்கள் சென்று நீரேற்று வழிமுறைகளை அறிந்து வந்துள்ளனர். கரூரில் 1.25 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் காவிரி ஆற்றில் கதவணை அமைக்கப்படும். அதேபோல 3 இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது.


என்.ஐ.ஏ.,வுக்கு ஒத்துழைப்பு :

கேரளம் மற்றும் குடகு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர் பெறுவதில் சிக்கல் ஏற்படாது. பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த என்.ஐ.ஏ.,விற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கப்படும். விவசாயிகள் பாதிக்காத வகையில், சேலம் - சென்னை 8 வழி விரைவுச்சாலை செயல்படுத்தப்படும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சேலத்தில் இந்தாண்டு முதலே சட்டக்கல்லுாரி செயல்படத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
22-ஜூலை-201920:58:57 IST Report Abuse
Ray கரூரை விட சேலத்தில் ஒன்று கள்ளக்குறிச்சியில் ஒன்று என இரண்டு தடுப்பணைகள் கட்ட வேண்டும்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
22-ஜூலை-201920:03:51 IST Report Abuse
bal போன வருடமும் திட்டங்கள் நிறைய போடப்பட்டன. நிதி ஒதுக்கப்பட்டது...எங்கே போனது அத்தனை பணமும்...இந்த திட்டத்துக்கு எதனை கோடி உங்கள் வீட்டுக்கு போகப்போகுது.
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
22-ஜூலை-201923:44:40 IST Report Abuse
N.K அரசாங்கம் ஒரு விஷயத்தை செய்யும்போது முதலில் நாம் நம்பவேண்டும். எப்பொழுதுபார்த்தாலும் சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கக்கூடாது....
Rate this:
Cancel
22-ஜூலை-201918:06:19 IST Report Abuse
ஆப்பு காவேரி கோதாவரி திட்டம் விரைவில் நிறைவேறும்னா கரூரில் கதவணை எல்லாம் எதுக்கு? ஓ.... அதுக்கா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X