கரூரில் கதவணை கட்டத் திட்டம்: முதல்வர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கரூரில் கதவணை கட்டத் திட்டம்: முதல்வர்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (14)
Share

சேலம் ; கரூரில் காவிரியாற்றின் குறுக்கே 1.25 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க கதவணை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.



latest tamil news



கோதாவரி - காவிரி இணைப்பு :


சேலத்தில் செ்தியாளர்களிடம் பேசுகையில், '' கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேறும். அது சாத்தியமானால் காவரி ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி இருபுறமும் 50 கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாயிகள் பயன் அடைவர்.


latest tamil news



கரூரில் கதவணை :

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தமிழக பொறியாளர்கள் சென்று நீரேற்று வழிமுறைகளை அறிந்து வந்துள்ளனர். கரூரில் 1.25 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் காவிரி ஆற்றில் கதவணை அமைக்கப்படும். அதேபோல 3 இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது.


என்.ஐ.ஏ.,வுக்கு ஒத்துழைப்பு :

கேரளம் மற்றும் குடகு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர் பெறுவதில் சிக்கல் ஏற்படாது. பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த என்.ஐ.ஏ.,விற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கப்படும். விவசாயிகள் பாதிக்காத வகையில், சேலம் - சென்னை 8 வழி விரைவுச்சாலை செயல்படுத்தப்படும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சேலத்தில் இந்தாண்டு முதலே சட்டக்கல்லுாரி செயல்படத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X