பொது செய்தி

இந்தியா

அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (86)
Share
Advertisement
சென்னை: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்யும், 'சந்திரயான் - 2' விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும்

சென்னை: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்யும், 'சந்திரயான் - 2' விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.latest tamil newsஇஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும் அங்கு மக்கள் வாழ சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற் கொள்ள,'சந்திரயான் - 2' என்ற விண்கலத்தை, உருவாக்கியுள்ளது.


latest tamil newsஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, 'ஜி.எஸ். எல்.வி., மாக் 3 - எம்1' ராக்கெட், 15ம் தேதி, அதிகாலை, 2:51 மணிக்கு,விண்ணில் பாய இருந்தது.

அதற்கு, 56 நிமிடங்கள், 24 வினாடிகள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சந்திரயான் - 2 விண்கலம் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக, இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, 'ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 - எம் 1' ராக்கெட், இன்று மதியம், சரியாக 2:43 மணிக்கு, விண்ணில் பாய்ந்தது.


நிலவை சென்றடையும்மொத்தம், 3.8 டன் எடையுள்ள இந்த விண்கலம், ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது. சந்திரயான் - 2 விண்கலம், 603 கோடி ரூபாயிலும், அதை ஏந்தி செல்லும், ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட், 375 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ., துாரம் பயணம் செய்யும் விண்கலம், செப்., 6 அல்லது 7ம் தேதி நிலவை சென்றடையும்.
சந்திரயான் ஏவப்படுவதை பார்வையிட சிறப்பு விருந்தினராக கோவை ஈஷா யோகா மைய தலைவர் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
23-ஜூலை-201914:24:16 IST Report Abuse
K.P  SARATHI மாநிலங்களுக்கிடைய, மதங்களிக்கிடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நாம் இந்தியன் என்று பெருமை கொள்ளவேண்டிய ஒரு துறை இந்த இஸ்ரோ மட்டுமே .
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
23-ஜூலை-201900:47:39 IST Report Abuse
தமிழர்நீதி பூமிக்கு கீழ் உள்ள நீரெல்லாம் வற்றிப்போனதால் , நிலவில் நீரெடுக்க செல்கிறது . பூமியில் பாதி இந்தியன் வறுமையில் வாடுவதால் நிலவிலிருந்து அரசிகொண்டுவரச்செல்கிறது . பூமியில் உடுத்திக்க துண்டில்லாமல் கால்வாசி இந்தியன் காந்தியாக இருப்பதால் கோவணம் என்றிவர செல்கிறது சந்திராயன் . புல்லரிக்கிறது 👇 இனி இந்தியா உலக வரிசையில் 🐒. தி லான்ச்👇
Rate this:
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
23-ஜூலை-201907:05:27 IST Report Abuse
Dr.T.Senthilsigamaniபூமிக்கு மேல் உள்ள மனிதரெல்லாம் சொர்க்கத்தில் 76 நித்திய கன்னிகள் வேண்டி கொத்துகொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள் .பூமியில் பெண்கள் காய்கறி வாங்க போய்விட்டு ஐந்து நிமிடம் லேட்டாக வந்ததற்கு தலாக் தலாக்.பூமியில் செஸ் விளையாடினால்,மேடையில் பாட்டு பாடினால் யோகா செய்தால் பாத்வா பூமியில் பெண்கள் போர் அடிமை கைதிகளாகி பாலியல் கொடுமைகள் அனுபவிக்க ,சிறுவர்களும் ,சிறுமிகளும் மதவாத சக்திகளால் தேவாலயங்களில் வெடித்த குண்டுகளால் உடல் சிதறி இறக்க நிலாவுக்கு பயணம் அவசியமா ?பூமியில் கார் ஓட்டும் ஓட்டுரிமை மற்றும் தேர்தலில் வாக்களிக்கும் ஓட்டுரிமை,பெண்கள் படிக்ககூடாது என பள்ளிக்கூடங்களை தீக்கிரையாக்கும் சமூகம் , பூமியில் பெண்கள் பிள்ளை பெற்று கொள்ள இயந்திரம் மட்டுமே என ஒடுக்கி வைத்திருக்கும் காலத்தில் ISRO வில் 30 % பெண்கள் பங்கு பெற்று சாதனை படைக்கும் சந்திரயான் 2 எதற்க்காக எனக்கேட்டு எனக்கு புல்லரிக்கிறது.கடக்கமுடியாத எல்லைகளை வெறுப்பவர்கள் தான் சாதாரண மானிடர் - என்பது சமகாலத்து தமிழறிஞர் கூற்று .பேத அறிவு என ஓன்று உண்டு .துண்டு பட்ட அறிவு முழுமை நோக்கிய பயணம் இல்லாத அறிவு அது வெற்று ஆணவத்தை மட்டுமே வளர்க்கும் .கீழ்மையில் ஆழ்த்தி வைக்கும் எந்தவகையிலும் விடுதலை செய்யாது ,உலக நீதி ,இந்திய நீதி ,தமிழ் நீதி ,ஹிந்தி நீதி என பாகுபாடின்றி மனதை ஆக்கிரமிக்கும் .சொல்லப்போனால் பூமியில் மிகப்பெரிய தளை இது தான் முற்றாக விலகி விடுங்கள் .என்பதும் நான் மதிக்கும் சமகாலத்து தமிழறிஞர் கூற்று.யுத்த பூமியில் பிறக்காமல் சமாதான பூமியில் பிறந்தவர் யாவரும் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர் .சீர் தூக்கி நின்றிடுக...
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
22-ஜூலை-201922:55:39 IST Report Abuse
balakrishnan வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X