அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (86)
Share

சென்னை: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்யும், 'சந்திரயான் - 2' விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.



latest tamil news



இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும் அங்கு மக்கள் வாழ சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற் கொள்ள,'சந்திரயான் - 2' என்ற விண்கலத்தை, உருவாக்கியுள்ளது.


latest tamil news



ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, 'ஜி.எஸ். எல்.வி., மாக் 3 - எம்1' ராக்கெட், 15ம் தேதி, அதிகாலை, 2:51 மணிக்கு,விண்ணில் பாய இருந்தது.

அதற்கு, 56 நிமிடங்கள், 24 வினாடிகள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சந்திரயான் - 2 விண்கலம் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக, இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, 'ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 - எம் 1' ராக்கெட், இன்று மதியம், சரியாக 2:43 மணிக்கு, விண்ணில் பாய்ந்தது.


நிலவை சென்றடையும்



மொத்தம், 3.8 டன் எடையுள்ள இந்த விண்கலம், ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது. சந்திரயான் - 2 விண்கலம், 603 கோடி ரூபாயிலும், அதை ஏந்தி செல்லும், ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட், 375 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ., துாரம் பயணம் செய்யும் விண்கலம், செப்., 6 அல்லது 7ம் தேதி நிலவை சென்றடையும்.
சந்திரயான் ஏவப்படுவதை பார்வையிட சிறப்பு விருந்தினராக கோவை ஈஷா யோகா மைய தலைவர் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X