அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (30)
Advertisement
அமெரிக்கா, இந்து, சாமியார், தாக்குதல்

நியூயார்க்: அமெரிக்காவில் இந்து சாமியார் ஒருவர் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தி தப்பி ஓடினார். இந்த சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளை காரணம் என காங்., முன்னாள் அமைச்சரும், எம்.பி.,யுமான சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சசிதரூர் அவரது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது: நியூயார்கின் குயின்ஸ் ஓக்ஸ் (புளோரல் பார்க் ) பகுதியில் சிவசக்தி பீட கோயில் உள்ளது. இங்குள்ள சாமியார் ஹரீஸ் சந்தர் பூரிஜி தெருவில் சென்று கொண்டிருந்த போது ஒருவர் அவரை தாக்கியுள்ளார்.
இது எங்கள் நாடு என்ற கோஷத்தை எழுப்பியபடி ஓடினார். இது டிரம்பின் அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் குறித்த சமீபத்திய அவரது பேச்சும், அவர்கள் மீதான கடும் நடவடிக்கையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் தாக்குதல்கள் இதற்கு முன்னுதாரணமாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அவரது டுவிட்டரில் : " எங்களின் நாடு அழகானது, வெற்றிகரமாக அமெரிக்கா முன்னேறி வருகிறது. எங்களின் நாட்டை நீங்கள் வெறுத்தால் இங்கு சந்தோஷமாக வாழ முடியாது. நாட்டை விட்டு போக வேண்டியது தான்." என கூறியிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nester - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூலை-201915:52:44 IST Report Abuse
nester ஸ்வாமியை அடித்துவிட்டதற்காக பலர் கோபமடையலாம். நியாயம் தான். மனித மிருகங்கள் மதத்தால் உருவாக்கப்படுகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
28-ஜூலை-201917:49:34 IST Report Abuse
arabuthamilan கொல்லு பட்டறையில் கொசுவுக்கு ஈக்கும் (பூசாரி) என்ன வேலை. அங்கு போயி ஜெய் ராமா என்று கோஷம் போடா சொல்லியிருப்பார் . .போட்டு தள்ளிட்டானுக .
Rate this:
Share this comment
Cancel
milagu - chennai,இந்தியா
27-ஜூலை-201900:45:13 IST Report Abuse
milagu மிகவும் கண்டிக்கத்தக்கது. நம் அரசாங்கம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். அது போல இங்கு பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் கொலை செய்யும் கொலைகாரர்களை ஈவு இரக்கமின்றி தண்டிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X