பொது செய்தி

இந்தியா

வரலாற்று நிகழ்ச்சி: இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (16)
Advertisement

ஸ்ரீஹரிகோட்டா : சந்திரயான் 2 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டு, புவிவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இது இஸ்ரோவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.






சந்திரயான் -2 :


இன்று (ஜூலை 22) சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் மூலம் சந்திரயான் விண்கலம் நிலவை நோக்கி பாய்ந்தது. பின்னர் அங்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே சிவன் பேசினார்.


1.5 ஆண்டு உழைப்பு


@
அப்போது அவர் கூறுகையில், '' கடந்த ஒன்னரை ஆண்டுகாலமாக இடைவெளியின்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகக்கடுமையாக உழைத்தனர். இந்த நாளுக்காகத்தான் நாம் காத்திருந்தோம். இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். நிலவின் தென்துருவத்தை நோக்கிய இந்தியாவின் வெற்றிகரமான பயணம் துவங்கியுள்ளது.





ஒரே நாளில் கோளாறு சரிசெய்யப்பட்டது:

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது, சிறிதும் துவண்டுவிடாமல் அடுத்த 24 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது. மிக விரைவில் அந்த சிரமத்திலிருந்து நாம் மீண்டு வந்துள்ளோம். அடுத்த 1.5 நாளில் நாம் சரியான திசையையும் கண்டடைந்தோம். இதற்கென உழைத்த வல்லுநர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் தியாகப்பூர்வமாய் ஒத்துழைத்த அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி. அவர்கள் அனைவருக்குமே நான் வணக்கம் செலுத்துகிறேன்.


அடுத்த 1.5 மாதம் முக்கியம் :


இந்த சந்திராயன் 2 விண்கலத்தை ஏவியதில், இதற்கு முன்னர் இருந்ததை விடவும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் நாம் இத்துடன் திருப்தியடைந்துவிடக் கூடாது. அடுத்த ஒன்னரை மாதங்கள் முக்கியமானவை. நிலவின் தென்துருவத்தில் சந்திரயானை தரையிறக்கும் வரையில் நமது இலக்கு முடிவதில்லை.





15 கட்டங்களை தாண்டி :

இந்த இலக்கை நாம் வெற்றிகரமாக அடைவதற்கு 15 கட்டங்களை தாண்டி வந்திருக்கிறோம். இறுதி இலக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவது தான். நமது அடுத்த பெரிய இலக்கு கார்ட்டோசாட் -3 என்னும், அதிநவீன ராக்கெட் வடிவமைப்பு தான். அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul. K - Hougang,சிங்கப்பூர்
28-ஜூலை-201909:02:04 IST Report Abuse
Arul. K வாழ்த்துக்கள் வானவியலில் இந்தியர்கள் அன்றும் இன்றும் என்றும் சளைட்த்தவர்கள் அல்ல
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
22-ஜூலை-201919:01:09 IST Report Abuse
blocked user வெற்றிகரமாக சந்திரனின் துருவப்பகுதியில் இறங்கி ஆய்வு செய்தால் இந்தியா நிச்சயம் எந்த நாடும் செய்யாத சாதனையை செய்து இருக்கிறது என்று சொல்லலாம். நிச்சயம் அது இந்தியாவுக்கு சத்தியமாக சாத்தியமே... மீண்டும் நம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
23m Pulikesi - Chennai,இந்தியா
22-ஜூலை-201918:21:07 IST Report Abuse
23m Pulikesi இந்த சாதனைக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிகுந்த பெருமையாக உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X