வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி: நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக இந்தியா உருவாக்கி உள்ள சந்திரயான் 2, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு கால உழைப்பிற்கு பிறகு சந்தியரான் 2 விண்வெளில் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 15 ம் தேதி அதிகாலை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2

புதுடில்லி: நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக இந்தியா உருவாக்கி உள்ள சந்திரயான் 2, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு கால உழைப்பிற்கு பிறகு சந்தியரான் 2 விண்வெளில் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 15 ம் தேதி அதிகாலை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2 விண்கலம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.latest tamil news


இன்று (ஜூலை 22) வெற்றிகரமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் நேரடி நிகழ்வை பிரதமர் மோடி, டிவி.,யில் பார்த்தார். சந்திரயான் 2 வெற்றிக்காக பார்லி.,யின் இரு அவைகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


சந்திரயான் 2 சிறப்பம்சங்கள் :* சந்திராயன் 2 விண்கலம், Orbiter, lander, rover ஆகிய 3 முக்கிய பாகங்களை கொண்டது.


latest tamil news


* இவற்றில் Orbiter அடுத்த ஓராண்டு விண்வெளியில் பயணம் செய்து நிலவின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தில் மெல்லிய பகுதிகளை படம் எடுத்து பூமிக்கு அனுப்பும்.
* விக்ரம் (இஸ்ரோவை உருவாக்கியவரின் நினைவாக) என பெயரிடப்பட்டுள்ள Lander, 27 கிலோ எடை கொண்ட Rover ன் பாகங்களை சுமந்து சென்று நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். Rover எனப்படும் பிரக்யான், 14 நாட்கள் பயணித்து நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பூமிக்கு அனுப்பும்.
* மிக சக்தி வாய்ந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தி உள்ளது. இதன் எடை 640 டன். 14 அடுக்குகளை கொண்ட இந்த ராக்கெட், 44 மீட்டர் நீளமுடையது.


latest tamil news


* சந்திரயான் 2 மொத்தமாக 3,84,000 கி.மீ.,தூரம் பயணித்து நிலவின் தெற்கு பகுதியை செப்டம்பர் 6 அல்லது 7 அன்று திட்டமிட்டபடி அடையும் என இஸ்ரோ எதிர்பார்க்கிறது.
* ஏறக்குறைய 6 வாரங்களுக்கும் அதிகமாக சந்திரயான் 2 பயணிக்க உள்ளது. இது 50 ஆண்டுகளுக்கு முன் நிலவிற்கு முதல் முறையாக அமெரிக்கா அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலம் பயணித்த நாட்களை விட அதிகம்.
* எரிபொருளை சேமிப்பதற்காக, புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து அதிவேகமாக இழுத்து செல்லும் நவீன (ஸ்பிரிங் போன்று) நீள்வட்ட பாதையில் சந்திரயான் 2 விண்கலத்தை பயணிக்க வைக்க இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. நேரடி பாதையில் சந்திரயான் 2 வை கொண்டு செல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்த ராக்கெட் இந்தியாவிடம் இல்லாததே இதற்கு காரணம். உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் அப்பல்லோ விண்கல திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட Saturn V ராக்கெட் தான்.


latest tamil news


* நிலவில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கப் போகும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக விண்கலங்களை தரையிறக்கி உள்ளன.
* சுமார் 1000 இன்ஜினியர்கள், விஞ்ஞானிகள் சந்திரயான் 2 திட்டத்தில் பணியாற்றி உள்ளனர். விண்வெளி ஆய்வுக்கான பயண திட்டத்தில் பணியாற்ற பெண்களையும் இஸ்ரோ தேர்வு செய்துள்ளது இதுவே முதல் முறை.
* நிலவை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் 2 பெண்கள் பணியாற்றி உள்ளனர். இவர்களில் ஒருவர் திட்ட இயக்குனர் வனிதா, மற்றொருவர் திட்ட பயண கண்காணிப்பாளர் ரித்து கரிதால்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X